சிவவாக்கியம் பாடல் 95 – சோருகின்ற பூதம்

சிவவாக்கியம் பாடல் 95 – சோருகின்ற பூதம்

95. சோருகின்ற பூதம் போல், சுணங்கு போல் கிடந்த தீ ,
நாறுகின்ற கும்பியின் நவின்றெழுந்த , மூடரே!
சீறுகின்ற ஐவரை சினக்கருக்க வல்லீரேல்,
ஆறு கோடி மேனியார் , ஆறில் ஒன்றில் ஆவரே!.

திருமேனி உருவாக காரணமான , ஆண் பெண் இணைதளை, காதலாக பார்க்காமல், காமமாக பார்ப்போரை இகழ்ந்து பாடும் பாடல் இது. சோர்ந்து போன பூதம் போல், தந்தையின் விறைப் பையில் சுணங்கி கிடந்த தீயாகிய அவர்கள், நாறுகின்ற இடத்தில் , நவின்றெழந்த மூடரே, என அவர்களைப் பார்த்து , இகழ்கிறார். மதம் பிடித்து ஐம்புலன்களையும் அடக்கி ஒடுக்க தெரியாமல் இருந்தால் ஆறு கோடி மேனியுள்ளவர்களில் ஒருவராகத் தான் ஒன்றும் அறியாமல், உலக நடப்புகள் தெரியாமல் மாய்கையில் சிக்கி , அல்லல் படுவார்கள் என்கிறார். அவர் காலத்தில் 6 கோடி பேர்கள்தான் இருந்தார்களோ?.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *