சிவவாக்கியம் பாடல் 94 – மூன்று மூன்று மூன்றுமே

சிவவாக்கியம் பாடல் 94 – மூன்று மூன்று மூன்றுமே

94. மூன்று மூன்று மூன்றுமே, மூவர் தேவர் தேடிடும்,
மூன்றும், அஞ்சு எழுத்துமாய், முழங்கு மவ் எழுத்துலே!
ஈன்ற தாயும் அப்பனும் , இயங்குகின்ற நாதமும்,
தோன்றும் மண்டலத்திலே , சொல்ல வெங்கும் தில்லையே!.

சிவம், சக்தி, உயிர் என மூன்றினால் தான் இந்த அண்டம் இயங்குகிறது. சிவம் என்றால் பொருள். கண்ணில் பார்க்க முடிந்த அனைத்துமே சிவம். இவை வெளி, காற்று, வெப்பம் என ஆதியான மூன்றால் ஆனது.
அடுத்து சக்தி கண்ணில் கானும் அனைத்துப் பொருட்களும் இயங்க 8 வகையான சக்திகள் உள்ளன. ஆனால் 8 சக்திகளுக்கும் மூலம் மூன்று சக்திகள் தான். அவை light – ஒளி – Sound- ஒலி, heat. – வெப்பம். அதே போல் இந்த உலகத்தை அறிந்து கொள்ளும் நான் எனும் உயிர் மூன்று வகை மனம், புத்தி, சித்தம், என்பது. இப்படி மூன்று , மூன்று, மூன்றுமே இந்த மூவரையும் தேடி அலைந்து கொண்டு இருக்கும் தேவர்கள். அ உ ம் நமசிவாய எனும் மூன்றும் அஞ்சு எழுத்துமாய், முழங்கு ம் எனும் எழுத்தின் உள்ளே உள்ளது என்கிறார். ம் எனும் எழுத்துதான் மனமாக (low freq) ஒலி கற்றையாகவும். Sound- ஆகவும். புத்தியாக (Colour-freq) ஒளி கற்றையாகவும். இதுவரை தான் உருவாக்கவும், புரிந்துகொள்ளவும் கருவிகள் உள்ளது. சித்தம் என்பது ஆழ்மனம். இது அதி உயர் அலைக் கற்றைகளை கொண்டது. அதை நம் சித்தத்தால் தான் அறிய முடியும். அதை நாம் கருவிகளாக செய்ய முடியாது. அந்த ம் எனும் (சித்தம்) நாதத்தால் தான் இந்த பேரண்டம் முழுதும் இணைந்துள்ளது. ஈன்ற தாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும், நம் மனதில் தோன்றும் மண்டலத்தில் என்னவென்று சொல்ல. எங்கும் தில்லையே என்கிறார். தில்லை என்றால் 7-ம் சக்கரம். மிகப்பெரிய ஆரம். சகசராரம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *