93. மூன்று மண்டலத்திலும், முட்டி நின்ற தூணிலும்,
நான்ற பாம்பின் வாயிலும், நவின்றெழுந்த அக்சரம்.
ஈன்ற தாயும் அப்பனும், எடுத்துரைத்த மந்திரம்.
தோன்றும் ஓர் எழுத்துலே, சொல்ல எங்கும் இல்லையே!..
நட்சத்திர மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம். இப்படி எங்கு நோக்கினும், ஒலித்திடும் ஓம் எனும் மந்திரம் , முட்டி நின்ற தூணிலும் அதிர்வால் ஓம் எனும் நாதம். நான்ற பாம்பு என்றால், வேல் போல் உள்ள உயிர் கருமுட்டையில் துளைத்தல் என்று பொருள். அதன் வாயிலும் ஓம் எனும் நாதம் நவின்று எழும் என்கிறார். ஈன்ற தாயும் அப்பனும், இணைதலின் போது இன்பத்தில் அ உ ம் என்று எடுத்துரைத்த மந்திரம், இப்படி அ உ ம் என்பது ஓம் என்று தோன்றும் ஓர் எழுத்தின் அற்புதத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments