91. இரண்டும் ஒன்று மூலமாய் , இயங்கு சக்கரத்துள்ளே!
சுருண்டு மூன்று வளையமாய், சுணங்கு போல் கிடந்த தீ.
முரண்டு எழுந்து சங்கின் ஓசை மூல நாடி ஊடு போய்,
அரங்கன் பட்டணத்துளே அமர்ந்ததே சிவாயமே!.
உடம்பின் ஆறு சக்கரங்களை புரிந்து கொள்ள வேண்டும். முதல் சக்கரம் மூல ஆதாரம். முதுகுத் தண்டின் கீழ் நுனியில் இருந்து, ஆணுக்கு விறைப் பையாகவும், பெண்ணுக்கு கருப்பையாகவும் உள்ளது தான் மூல ஆதாரம். இந்த பகுதிதான் அடுத்த உடல் உருவாகும் ஆதாரப் பகுதி. இங்கு தான் Adrinal சுரப்பி உள்ள இடம்.அடுத்து சு வதி தானம். சு என்றால் சுக்கிலம் ஆணுக்கு, சுரோணிதம் பெண்ணுக்கு சுரக்கும் உறுப்புகள், சிறுநீரகம், சிறுநீர்ப்பை , உள்ள இடம். அடுத்து மணிப்பூரகம். மணி என்றால் time என அர்த்தம். நம் உடல் உருப்புகள் இயங்க கால நேர இயக்கங்கள் இங்கிருந்து தான் கட்டுப்படுத்தப் படுகிறது. மன்னீரல பித்தப்பை உள்ள இடம். அடுத்து அனல் காத்த சக்கரம். அனாகதம் . இங்கு உடலின் வெப்பம் கட்டுபடுத்தப்படுகிறது. இருதயம், மேலுறை உள்ள இடம். அடுத்து வீ சுத்தி சக்கரம். உடலை கொழுப்புகளை உருவாக்கி சேமித்தலும், கரைத்தலும் கொண்ட சுத்தம் செய்யும் Thyroid சுரப்பி உள்ள இடம். அடுத்து ஆக்கு நெய் சக்கரம். உடலை நோயில்லாமல் இருக்க , ஆனந்தமாய் இருக்க சுரக்கும் நெய் இந்த ஆனந்த சுரப்பி, இத நாடி, பின் கல நாடி என சக்கரங்களாக நம் உடல் பிரிந்து வேலை செய்கிறது. இப்படி 6 சக்கரங்களில், ஓம் எனும் மூல ஆதாரத்தில் முதல் சக்கரத்தில் ஆணின விரைப் பையில் மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்த தீ என்றால. விநாயகர் சிலைக்கு அருகில் பாம்பு மூன்று வளையமாக வைத்துள்ள சிலையை அனைவரும் அறிவோம். அது இது தான். அனைவரின், அதாவது ஆண். பெண் இருவரின் முதுகுத் தண்டும் , ஆணின் விரைப்பைக்குள், மூன்று வளையமாய் சுணங்கு போல், உயிரில்லாமல், கிடந்த தீ என்கிறார். அதுதான் ஆண் பெண் இனைதலின் போது முரண்டு எழுந்து என்றால் விந்து நீரில் உயிர் பெற்று, சங்கின் ஓசையுடன் என்றால் ம் எனும் நாதத்துடன் பெண்ணின் மூலநாடி ஊடு போய் , கருமுட்டையான அரங்கன் பட்டணத்தில் அமர்ந்ததே. என்கிறார். இவ்வளவு அறிவியல் அறிந்த சித்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கிறார்கள் நம் தமிழகத்தில்.
Tags: சிவவாக்கியம்
No Comments