சிவவாக்கியம் பாடல் 90 – நவ் இரண்டு

சிவவாக்கியம் பாடல் 90 – நவ் இரண்டு

90. நவ் இரண்டு காலதாய், நவின்ற மவ் வயிற தாய்.
சிவ் இரண்டு தோளதாய், சிறந்த வவ் வாய தாய்,
யவ் இரண்டு , கண் ணதாய். எழுந்து நின்ற நேர்மையில்.
செவ்வை ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே!.

ந ம சி வா ய எனும் ஐந்தெழுத்தில் அமைந்த முதுகுத் தண்டான , தந்தையின் விதைப்பையில் இருந்து எழுந்து , தாயின் கருப்பையில் தைத்து , அதன் வால் ஆக இருக்கும் ந எனும் மந்திரம் இரண்டு கால்களாய் தாய் வயிற்றில் முளைக்கும்.
ம எனும் பகுதி வயிறாகவும் , சி எனும் பகுதி தோள்களாகவும், சிறந்த வா என்பது வாயாகவும், ய எனும் எழுத்து கண்களாகவும் உருவாகிறது. இப்படி உடல் உருவாகி எழுந்து நின்ற நேர்மையில் , சுருக்கமில்லாத நெருப்பின் குணத்தை ஒத்து இருந்தது, இந்த ஐந்து எழுத்துக்களும் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *