89. அவ்வுதித்த மந்திரம் மகாரமாய், உகாரமாய்.
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு , எழு பிறப்பு தீங்கில்லை ?
சவ்வுதித்த மந்திரத்தை, தற்பரத்தில் இருத்தினால்.
அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!.
அ எனும் பெரு வெடிப்பில் உதித்தது தான் உ எனும் உயிர் உற்பத்தி எழுத்தும், ம எனும் நீரும். விதை நீரில் ஊரினால் உண்டாவது தான் உயிர். உயிர் உற்ப்பத்தி ஆவதற்கு முன்பே ஐம்பூதங்களும் இருக்கின்றது. எவ்வெழுத்து அறிந்தவர்க்கு, எழுபிறப்பு இங்கில்லை என்கிறார். அவரே சவ் வுதித்த மந்திரத்தை தன் பரத்தில் இருத்தினால் என்பதிலிருந்து. சி எனும் எழத்தை அறிந்தவர்க்கு எழ பிறப்பு தீங்கு இல்லை என்கிறார். ச+இ= சி. நெருப்பு அதன் தன்மையை அறிந்தால் , எழுபிறப்பும் இங்கு தீங்கில்லாமல் வாழ்வார்கள் என்கிறார். 37 திகிரி C -ல் இருந்தால்தான் நம் உடலில் உயிர் தங்கும். சூரியனில் இருந்து அந்த தூரத்தில் பூமி அமைந்து இருப்பதால தான் பூமியில் உயிர் வாழ்கிறது. வேறு கோள்களில் நீரே இருந்தாலும் உயிர்கள் இல்லாமல் இருப்பதற்கு இந்த வெப்பம் காரணமாக இருக்கும். இதையெல்லாம் பரம் ஆகிய நம் சிரசில் இருத்தி இருந்தால் இந்த உலக மாயைகள் வெறும் அற்பங்களாகி பிறப்பு அறுந்து விடும் என்கிறார். இது தான் ஓம் எனும் மந்திரமாக அ உ ம் ஆக சிவாயம் அமாந்து உடலைப் பெறுகிறது . என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments