சிவவாக்கியம் பாடல் 88 – ஆல வித்தில்

சிவவாக்கியம் பாடல் 88 – ஆல வித்தில்

88. ஆல வித்தில் ஆல் ஒடுங்கி , ஆலமான வாறு போல்.
வேறு வித்தும் இன்றியே, விளைந்து போகம் எய்திடீர்.
ஆறு வித்தை ஓர்கிலீர், அறிவிலாத மாந்தரே?
பாரும் இத்தை உம்முளே, பரப்பிரம்மம் ஆனதே!.

ஆலமரத்தின் இலை வடிவம், நீளம், அகலம், தண்டு எவ்வளவு , கடினமாக இருக்க வேண்டும் போன்ற ஏராளமான, அத்தனை தகவல்களும், ஆலமரத்தின் விதையில் ஒடுங்கி இருப்பது போல், நீங்கள் உங்கள் உடலை எங்கிருந்து பெற்று , இந்த போகங்களை அனுபவிக்கிறீரகள்?, உங்கள் வித்து இல்லாமல் இருக்குமா? ஆறு ( யாரு) இந்த வித்தை நமக்கு கொடுத்தார்கள் என்று தெரியாத அறிவில்லாத மாந்தர்களே. உம்முள் இதைப் பாருங்கள் , அதுதான் பரப்பிரம்மம் ஆனது என்கிறார். உம்முள்ளே ஒடுங்கி , உம்முள்ளும் இணைந்து உங்களுடைய மனத்தையும், உடலையும் இயக்கிக் கொண்டு அனைத்தினோடும் இணைந்துள்ளார் ,என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *