சிவவாக்கியம் பாடல் 87 – என்னவென்று சொல்லுவேன்

சிவவாக்கியம் பாடல் 87 – என்னவென்று சொல்லுவேன்

87. என்னவென்று சொல்லுவேன் இலக்கணம், இல்லாததை!
பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பென,
மின்னகத்தில் மின் ஒடுங்கி மின்னதான வாருபோல்.
என்னகத்தில் ஈசனும், யானும் அல்லதில்லையே !

இவன் தான் இறைவன், என கண்டு பிடித்து , முடிவு செய்து , அறிவிப்பதற்குள், நிலை மாறி நிரூபிக்க முடியாமல், இலக்கணம் இல்லாதவனை என்னவென்று சொல்வேன், எப்படி விளக்கிச் சொல்வேன் என்கிறார். அப்படியும் அவனைப் பற்றி சொல்ல , பதமான வார்த்தைகளைக் கொண்ட செந்தமிழ் , அதன் பண்பால், இந்தப் பாடல்களைப் பன்னுகிறேன், என்கிறார். நீர் சூடாகி ஆவியாக , Hydrogen , oxygen ஆக பிரிந்து வாயுவாக மேலே எழுந்து காற்றால் அலைந்து இடம் மாறி , மேலே செல்ல செல்ல குளிர்ச்சியாகி , வெண்மேகமாக கண்களுக்குத் தெரிய ஆரம்பித்து, மேலும் குளிர்ச்சியாகி கருமேகங்களாகி , மீண்டும் நீர் ஆகி மழை ஆக பொழிகிறது. கீழே நிலத்தில் பிரிந்த வாயு , மீண்டு கூடுவதால் ஏற்படும் மின்சக்தி , இதில் நடந்த மின் அகத்தில், மின் ஒடுங்கி இருந்து, அந்த சூடான காற்றில் இருந்த சூடு சக்தி , மீண்டும் நிலத்திற்கு வெடித்து மின்னலாக மாறி இறங்குவது போல், என் அகத்தில் ஈசனும், நானும் வேறு வேறாக, நான் என்பதை மறக்கும் அளவுக்கு , ஒன்றாகி , கலந்து விட்டான் . இப்பொழுது அவனும் நானும் வேறல்ல. என புலங்காகிதம் அடைகிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *