86. அவ் எனும் எழுத்தினால், அகண்டம் ஏழும் ஆகினாய்.
உவ் எனும் எழுத்தினால், உருத்தரித்து நின்றனை.
மவ் எனும் எழுத்தினால், மயங்கினார்கள் வையகம்.
அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!
அ எனும் எழுத்து நம் பால் வெளியான அண்டத்தின் வடிவத்தினை குறிக்கும் வடிவம். நம் முதுகு தண்டினை 6 முடிச்சுகளாக , 6 சக்கரங்களாகவும், 6 கண்டமாக ஏழாவது சக்கரமாக வெளியில் , (அதனுடன் நம் உடல் இனைப்பில் உள்ளது. நாம் தான் அதை அறியவில்லை) சகசராரமாக உள்ளது ஏழாவது கண்டமாக , (தனித்தனியாக) கண்டங்களாக இல்லாமல் சேர்ந்து, நம் உடல் அகண்டமாக ஏழும் ஆகினாய் என்கிறார். அந்த முதுகு தண்டுதான், ஆண் பெண் சேர்க்கையின் பொழுது உயிர் பெற்று (உவ் எனும் எழத்தினால்) கருமுட்டையில் தரித்தனை. இணைதலில் ம் எனும் , மயங்கியதால் வந்த ஒலியினை வையகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் எழுப்பும். இப்படி, மவ்வும், உவ்வும், அவ்வுமாய் தான் அமர்ந்து குழந்தையாக உருமாருகிறது, சிவாயம் என்கிறார். ஒள எனும் எழுத்து மனிதனை குறித்த வடிவம். உயிர் எழுத்தின் முதல் எழுத்து அ எனும் பெருவெடிப்பு நிழந்து அண்டம் ஆனதை குறித்த வடிவம். அதில் ஆரம்பித்து உயிர் உற்பத்தி ஆகி இறைவனது படைப்பில் highest technology ஆன மனித படைப்பு 12 வதுஎழுத்தான ஒள எனும் எழுத்து. 12 உயிர் எழுத்துக்களின் வடிவம் அண்டத்தின் கால அட்டவனை. (periodic table). இவை எல்லாம் சிவ வாக்கியர் காலத்தில் அனைவருக்கும் சாதாரணமாக தெரிந்திருக்கிறது. அதனால் அதை சரளமாக பாடுகிறார். இந்த அவசர குடுக்கைகள், நிதானமாக நம் தமிழ் வரலாற்றை , மறைத்ததால் இப்பொழது இவையெல்லாம் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் காலம் உண்மைகளை மறைக்காது, வெளிக் கொண்டு வரும்.
Tags: சிவவாக்கியம்
No Comments