85. உடம்பு உயிர் எடுத்ததோ? உயிர் உடம்பு எடுத்ததோ?
உடம்பு உயிர் எடுத்த போது, உருவம் ஏது செப்புவீர்?
உடம்பு உயிர் இறந்த போது, உயிர் இறப்பது இல்லையே!
உடம்பு மெய் மறந்து கண்டு உணர்ந்த ஞானம் ஓதுமே!
நம் உடலை உயிர் எடுத்ததா? இல்லை உயிர் உடலைப் எடுத்ததா? என்பது தான் கேள்வி. இந்த உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது சொல்லுங்கள் ? என கேட்பதிலிருந்து உடம்பு தான் உயிர் எடுக்கிறது என அவரே கூறுகிறார். எப்படி , செடி , மரம் விதைகள் நீரில் நனைத்து துணியில் கட்டி வைத்தால் ஊரி முளை விடுகிறது. உயிர் பெறுகிறது. அதே போல் ஆணின் விதைப்பையில் விதையாக, நம் முதுகுத் தண்டாக இருந்த உடம்பு , ஆண் பெண் இனைதலின் போது , நீரில் ஊரி , வேல் வடிவில் 3 வளையமாக சுருண்டு விதையாக இருந்த விதை , உயிர் பெற்று விந்துவாக பெண்ணின் கருமுட்டையை வளைந்து நெளிந்து , தரிக்கிறது. இதைத்தான் உருவம் ஏது செப்புவீர் என்கிறார். அந்த வேல் வடிவில் இருந்த உடல், கரு முட்டையில் இருந்து சத்துக்களைப் பெற்று, குழந்தையாக தாயின் வயிற்றில் உருப்பெற்று, வளர்ந்து வாழ் நாளை முடித்து, உடம்பில் உள்ள உயிர் இறந்து விடுகிறது. ஆனால் உயிர் இறப்பது இல்லை என்கிறார்.
அந்த உயிர் , அதுவரை இருந்த உடலை மறந்து , இதுவரை உடம்பு இருந்த போது நடந்த நிகழ்வுகளை கண்டு உணர்ந்து , ஞானம் ஓதும் என்கிறார். கண்டுணர்ந்து ஓதும் என்பதிலிருந்து ஒலி, ஒளி வடிவில், அலைக் கற்றைகளாக, Information ஆக உயிர் இருக்கிறது என்பதை உணர்த்துகிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments