84. தில்லையை வணங்கி நின்று , தெண்டனிட்ட வாயுவை !
எல்லையை கடந்து நின்ற ஏகபோக மாய்கையும்,
தெல்லையை கடந்து நின்ற சொர்க்க லோக வெளியிலே!
வெள்ளையும் சிவப்புமாகி, மெய் கலந்து நின்றதே!.
உண்மை வேறு, மாயை வேறு. அதாவது பூமிதான், சூரியனைச் சுற்றி வருகிறது. இது உண்மை. ஆனால் நாம் பூமியில் இருந்து பார்ப்பதால், சூரியன்தான் நம்மை சுற்றி வருவதாக கண்களுக்குத் தெரிகிறது. இது மாயை. ஆனால் மாய்கை என்பது, இந்த உண்மையையும், மாயையையும், ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்கிறோம். அதனால் தான் உலகம் சுவாரசியமாக இருக்கிறது. இந்த மாய்கை தான் , நம் பிறப்பின் அடிப்படை. இது வெப்பத்தால் உருவாவது. குளிர்பிரதேசத்தில் இருப்பவர்களின் மனநிலை, பாலைவனத்தில் இருப்பவர்களின் மனநிலை| இதமான இடங்களில் இருப்பவர்களின் மனநிலை, வெவ்வேறாக இருப்பதற்கு காரணம் வெப்பம். தில்லையை வணங்கி நின்று, தெண்டனிட்ட வாயுவும், தில்லை என்றால் நம் சிரசு. தெல்லையை கடந்து நின்ற என்றால் தெற்கு எல்லையான சிவத்தைக் குறிப்பதுதான். அந்த சொர்க்க லோக வெளி . அதாவது, வெப்பம், காற்று , வெளி இந்த மூன்றும் சேர்ந்துதான், ஆண்களுக்கு விதைப்பையில் வெள்ளை விதையாகவும், பெண்களுக்கு சிவந்த கரு முட்டையாகவும், மெய் கலந்து நிற்கிறது என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments