சிவவாக்கியம் பாடல் 83 – நெஞ்சிலே இருந்திருந்து

சிவவாக்கியம் பாடல் 83 – நெஞ்சிலே இருந்திருந்து

83. நெஞ்சிலே இருந்திருந்து, நெறிங்கி ஓடு வாயுவை,
அன்பினால் இருந்து நீர் அருகிருத்த வல்லீரேல்,
அன்பர் கோயில் காணலாம், அகன்று மென் இசைக்குளே ,
தும்மி ஓடி ஓடியே, சொல்லடா சுவாமியே!.

தும்மி ஓடி ஓடியே , சொல்லடா சுவாமியே ? என்றால் , அவன் ஒரு இடத்தில் நிற்க மாட்டானா.? நம் உடல் இயக்கத்தைப் புரிந்து கொண்டாலே, இதன் அர்த்தம் புரிந்து விடும். நம் உடல் இறைவனால் படைக்கப்பட்டு, நிறைய Control கள் Auto mode-ல் தான் உள்ளது. நாம் நம் உடலுக்கு செய்யும் தொந்தரவுகள் தான் அதிகம். அவரவர்கள் செய்யும் தொந்தரவுகளுக்கு ஏற்ப , Auto mode – ஆக இயங்கும் இறைவன், அங்கே , இங்கே என நம் உடலைப் பாதுகாக்க , ஓடிக் கொண்டே இருக்கும். இதே தான் அண்டத்திலும். நாம் நம் ஐந்து புலன்களை கவனிக்காமல், நெஞ்சிலே இருந்திருந்து, ஓடும் வாயுவை, கவனித்துக் கொண்டு இருந்தால், அதுவும் அன்பாக , இயல்பாக வரும் சாதரண மூச்சை , கவனித்துக் கொண்டு அதன் அருகில் இருக்க கூடிய அன்பர்கள் அகன்ற எண் திசைக்குள்ளே, அலைகளாய், மென் அதிர்வுகளுக்குள், நம்மோடு (கோயிலில்) இறைவன் குடி கொண்டு இருப்பதை அறியலாம். ஆனால் எப்போழதும் நம்மோடு இல்லாமல், நாம் அன்பாக மூச்சை கவனிக்காமல், புலன்களுக்குள் வந்தால், தும்மிக் கொண்டு ஓடி , நம்மை விட்டு அவன் செல்லமாட்டான். நாம் தான் அவன் இருப்பதை அறியாமல் , நான் எனும் அகங்காரத்துள் வந்து விடுவோம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *