82 . இறைவனால் எடுத்த மாட, தில்லை அம்பலத்திலே! அறிவினால் அடுத்த காயம் அஞ்சினால் அமர்ந்ததே!
கருவில் நாதம் மூண்டு போய், சுழன்று வாசல் ஒன்பதும்,
ஒருவராய், ஒருவர் கோடி உள்ளுலே அமர்ந்ததே!
ஆணின் விதைப் பையில் இருக்கும் வரை அது விந்து கிடையாது. அதன் பெயர் விதை. அது நெளிந்து கொண்டு இருக்காது. விநாயகர் சிலையின் அருகில் இருக்கும், மூன்று வளையமாய் பாம்பு போன்று வடிவில் அமர்ந்து இருக்கும். அதுதான் இறைவனால் எடுத்த மாடத்தில்லை அம்பலத்திலே (சிரசில்) அறிவினால் , நமக்கு அடுத்த குழந்தையின் , காயமாக ஐந்து பூதங்களால் ஆன விதையாக ஆணின் விதைப் பையில் அமர்ந்ததே என்கிறார். அந்த விதை , ஆனந்தத்தில் , நீரில் ஊறி, உயிராகி விந்தாக மாறி, வளைந்து நெளிந்து , தாயின் வயிற்றில் கருவினோடு , ஊன்றி , ஒன்பது வாசலாகவும், ஒவ்வொரு செல்லாக கோடிக்கனக்கான செல்களாக மாறி , தாய் வயிற்றினுன் அமர்ந்து உடலாக
உருவெடுக்கிறது என்கிறார். கண் – 2 காது – 2 மூக்கு – 2 வாய் – 1 கருவாய் – 1 எருவாய் – 1 ஆக ஒன்பது வாசல்.
Tags: சிவவாக்கியம்
No Comments