81. சோதி ஆதி ஆகி நின்ற , சுத்தமும் பலித்து வந்து,
போதியாத போதகத்தை, ஓதுகின்ற பூரணா !
வீதியாக ஓடிவந்து , விண்ணடியின் ஊடுபோய்,
ஆதிநாத நாதன் என்ற அனந்த காலம் உள்ளதே!
சோதி (சூரியன்) ஆதி ஆகி நின்று சுத்தமாக சூடாக உள்ள அந்த வெப்பம்தான்” போதியாத போதகம் (சொல்லித் தெரிவதில்லை) உருவாக்குவது. அந்த வெப்பம் இல்லாவிட்டால், நினைவுகள் அற்று, உணர்வுகள் இல்லாமல் போய்விடும். வான் வீதியில் , கிழக்கே எழுந்து ஓடி, மேற்கே விண் அடியில் , மறைந்து இப்படி அனேக காலங்களாய் ஆதி நாதமாய அனந்த காலமாய் அதாவது முடிவில்லாத காலமாய் உள்ளது.
Tags: சிவவாக்கியம்
No Comments