80. பருகி ஓடி உம்முளே, பறந்து வந்த வெளிதனை,
நிறுவியே நினைத்துப் பார்க்கில், நின் மலம் அதாகுமே!
உருகி ஓடி எங்குமாய் உதயசோதி தன்னுளே,
கருதடா உனக்கு நல்ல காரணம் அதாகுமே.
ஆணவம், கன்மம், மாயை இவைதான் , உண்மையை அறிய விடாமல் தடுக்கும், மலங்கள். இந்தப் பாடலில் பருகி ஓடி உம்முள் , அதாவது, நாமாக கற்ற கல்வி, சூழ்நிலையால் பெற்ற அறிவு, மற்றவர்களால் நமக்கு தினிக்கப்பட்ட புத்தி, இவைதான் நம்முள் பருகி ஒடி வந்த வெளியாக இருக்கிறது. அதுதான் நமக்கு உண்மையை அறிந்து கொள்ள முடியாத மாயையாக உள்ளது. ஏனென்றால் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உண்மைகளை அறிய விடாமல் , ஊடகங்கள் , குழப்பும், குழப்பங்களை நாம் அறிவோம். அந்த வெளிதனை நிறுவியே, நினைத்துப் பார்க்கில் , உன்னுடைய மலம் அது தான். அதே போல் நம் உடல் உருவாக காரணம், சூரிய ஒளிதான். அது உருகி ஓடி வெப்பமாக, உணவு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த உணவுதான், நம் உடலாக மாற , தாயின் வயிறறிலும், வெளிவந்தவுடன், உடல் வளர்வதற்கும் அந்த உதய சோதி தான் காரணம்.
Tags: சிவவாக்கியம்
No Comments