78. கான மற்ற காட்டகத்தில், வெந்தெழுந்த நீரு போல்,
ஞானமற்ற நெஞ்சகத்தில், நல்லது ஏதும் இல்லையே!
ஊனமற்ற சோதியோடு உணர்வு சேர்ந்து அடக்கினால்,
தேனகத்தின் ஊரல் போல் தெளிந்ததே சிவாயமே!.
அடர்ந்த காட்டினுள், காற்று அடிக்கும் பொழுது, எழும் ஓசைதான் கானம். கானம் இல்லை என்றால் , வளி என்று அர்த்தம். காற்று இல்லை என்றால் , உருக்கம் ஏற்படும். அதனால் வெந்து எழுந்த நீர் என்றால் நீர் ஆவியாகி எழுந்து புழக்கத்தை ஏற்படுத்தும். அப்பொழுது உடல் அவதியுறும். அது போல ஞானம் இல்லாத நெஞ்சகத்தில் நல்ல எண்ணங்கள் எழாமல், நல்லது எதையும் செய்ய முடியாது. அதனால் ஞானம் எனும் ஊனமற்ற சோதியோடு, ஐந்து உணர்வுகளையும், சேர்ந்து அடக்கினால், சிவாயம் என்பது நமக்குத் தெளிந்து விடும் என்கிறார். எப்படி என்றால் தேனில் ஊரல் போட்டால் , பனிக்கட்டி போல் தெளிந்த ஊரல் கிடைப்பது போல், மனதையும் சிவத்தையும், பிரித்து தெளிந்து கொள்வோம் என்கிறார். ஐம்புலன்களை அடக்குவது என்பது வெகு சுலபம். ஏனெனில் ஒரு சமயத்தில் ஐம்புலனும் வேலை செய்யாது. ஒரு சமயத்தில் ஒரு புலன் தான் வேலை செய்யும். ஆகவே ஒரு புலனை திசை திருப்ப , புருவ மத்தியிலோ, மூச்சையோ கவனித்தால் அந்த ஒரு புலனையும் கவனிக்காமல் (divert) ஆகி விடுவோம். இது குழந்தைகளுக்கான பயிறசி. சிறிது காலம் தான். உணர்வுகளை திசை திருப்பும் சாதாரண , அங்குசம் இதுதான்.
Tags: சிவவாக்கியம்
No Comments