76. ஒக்கவந்து மாதுடன், செறிந்திடத்தில் அழகிய,
ஒருவராகி, இருவராகி இளமை பெற்ற ஊரிலே,
அஃகனிந்து, கொன்றை சூடும் அம்பலத்தில் ‘ஆடுவார்,
அஞ்செழுத்தை ஓதிடில் அனேக பாவம் அகலுமே!
அஃகனிந்து கொன்றை சூடும் அம்பலம், என்றால் சுழிமுனை, இதநாடி, பின்கல நாடி என ஃ போன்று மூன்று நாடிகள் சிரசில் உடலை சீராக வைத்துக் கொண்டு , அண்டத்தின் ஆற்றலுடன் இணைந்து உள்ளது. சுழுமுனை ஐம்புலன்களையும் அறிந்து கொண்டு அண்டத்துடன் இணைந்து நானாக இருக்கிறது. மற்ற இத நாடியும், பின்கல நாடியும் , உடலை சீராக இருக்க வேலை செய்கிறது. அதனுடன் மனம் மூளை வழியாக ,இணைந்துள்ளது. மனம் பயந்தாலோ குழபபம் அடைந்தாலோ,, அது தாறுமாறாக வேலை செய்து , உடல் பாதிக்கும். மனம் அமைதியாக இருந்தால் , அது இயல்பாக வேலை செய்து , உடல் நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட ஃ போன்ற நாடிகள் உள்ள இடத்தில் , கொன்றை மலர்கள் சூடிய சிவம் இருக்கும் இடமான அம்பலமாக, அவனுடன் சேர்ந்து அம்பலத்தில் ஆட வேண்டும் என்றால் , நமசிவாயம் எனும் அர்த்தம் புரிந்து , ஓதிடில் அனேக பாவம் அகலும், என்கிறார். ஏனெனில் அமைதியாக 4 நாழிகை 96 நிமிடம்) தினமும் , உட்கார்ந்தாலே , மூன்று நாடிகளும் நன்கு வேலை செய்யும். உடல் பாதிப்புகள் குறையும். மனம் தெளிவடையும். இது சில நாட்களுக்குத்தான். பின் சாதரணமாக மனம் குழம்பாமல் , விரைந்து முடிவெடுக்கும் திறன் வளர்ந்துவிடும். திருமணமாகி ஒத்திசைவுடன் , இணைந்து, குழந்தை உருவாக்குகிறோம் என்று அறியாமலேயே, ஆனந்தமான இணைதலில் ஒற்றை செல் இரண்டாகி , பெருகி அழகிய இளமையான உடலை உருவாக்கிய நாம் , சிவத்துடன் இணைந்து , நம் சிரகில் உள்ள அம்பலத்தில் ஆடுவோம்.
Tags: சிவவாக்கியம்
No Comments