சிவவாக்கியம் பாடல் 75 – மிக்கசெல்வன் நீ

சிவவாக்கியம் பாடல் 75 – மிக்கசெல்வன் நீ

75. மிக்கசெல்வன் நீ படைத்த விறகு மேனி பாவிகாள்,
விறகுடன் கொளுத்தி மேனி , வெந்து போவது அறிகிலீர்,
மக்கள், பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவையெலாம்,
மறலி வந்தழைத்த போது, வந்து கூடலாகுமோ!.

நம் வாழ்வில் இப்பொழுது நடக்கும் நிகழ்வுகளே, கனத்துக்கு கனம் இறந்தகாலம் ஆகி விடுகிறது. அடுத்த கனம் எதிர்காலம் நிகழ்காலமாகி இறந்தகாலம் ஆகி விடுகிறது. இறந்தகாலமும், எதிர்காலமும் வெறும் நினைவுகள் தான் . நிகழ்காலத்தை பார்ப்பதற்குள் இறந்த காலம் ஆகி விடுகிறது. ஆகவே மக்கள், பெண்டிர் சுற்றம் என்பதெல்லாம் மாயைதான் என்கிறார். மறலி என்றால் எமன் காலன். அவன் வந்து அழைக்கும் போது இந்த உடலை வைத்து என்ன செய்வது?விறகுடன் அடுக்கி வைத்து தீ மூட்டி வெந்து போவதை அறியாமல் , இவை எல்லாம் மாயை என புரியாமல், இருக்கும் விறகு மேனி பாவிகாள் என ஆதங்கப்படுகிறார். இருக்கும், நிகழ்காலத்தில் இறைவனுடன் , கூடும் ரகசியம் அறிவீர்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *