73. மண்ணிலே பிறக்கவும், வழக்கலாது உறைக்கவும்,
எண்ணிலாத கோடி தேவர், என்னது உன்னது என்னவும்.
கண்ணிலே கண் மனி இருக்க, கண் மறைந்தவாறு போல்,
எண்ணில் கோடி தேவரும் இதன் கண்ணால் விழிப்பரே.
இந்த பாடலில் இறைவனைப் பற்றி குறிப்பு தருகிறார். இந்த மண்ணில் பிறந்திட வைத்து, வழக்கத்திற்கு மாறான செய்திகளை உறைக்கச் செய்பவன். எண்ணிக்கையில் அடங்காத கோடி மனிதர்கள், இது எங்கள் கடவுள், அது உங்கள் கடவுள் என்று, என்னிக் கொண்டு இருக்கும் இறைவன் எப்படி நம் உள்ளே உள்ளான் என குறிப்பிடுகிறார். நாம் கண்ணால் காண்கிறோம் , ஆனால் நமக்கு கண் இருப்பது தெரிவதில்லை. அதே போல் அந்த கண்ணுக்கும் தெரியாது நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம், என்று. ஐம்புலன்களையும் நம் உடலில் இருந்து , அறிந்து கொள்ளும் நான் என்னும் அதுதான், கண் எனும் புலனால் வெளி உலகத்தைப் பார்த்து அறிந்து கொள்கிறது. அந்த நான் உடன் இறைவன் , ஐம்பூதங்கள் அல்லாத, எட்டு சக்திகளும் அல்லாத ஆற்றலால் இணைந்து இருப்பான், என்கிறார். மூளையின் நடுவே சுழிமுனையில் அந்த குறு குறுப்பான குசுகுசுப்பில் உறையாடிக் கொண்டு ஆற்றலாக நான் என்பதுடன் எளிமையாக இணைந்து இருக்கிறான் இறைவன். அவனைத் தேடினால் கிடைக்க மாட்டான். நீங்கள் கேட்பதை அவன்தான் உங்களுக்கு படைத்துக கொண்டு இருக்கிறான். அதனுடன் சேர்த்து அதனால் வரும் வினைகளையும், அடைந்து கொண்டு உள்ளோம். எண்ணில் கோடி தேவரும் இறைவன் கண்ணால்தான் விழிப்பர் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments