72. கருக்குழியில் ஆசையாய் காதலுற்று நிற்கிறீர்,
குருக்கெடுக்கும் ஏழைகாள் குலாவுகின்ற பாவிகாள்,
இருத்துறுத்தி மெய்யினால், சிவந்த அஞ்செழுத்தையும்,
உருக்கழிக்கும் உம்மையும் , உணர்ந்து உணரநது கொள்ளுதே!
தமிழ் மரபில் பெண்களை , ஏழ கன்னிமார்களாகவும், சக்திகளாகவும், அம்மன்களாகவும், தெய்வங்களாகவும் , காம பார்வையின்றி, உடல் கொடுத்த தேவதைகளாக , மரியாதையுடனும், கன்னியத்துடனும், நடத்தினார்கள். நம் மரபில் எந்த இடத்திலும், ஜீபூம்பா வித்தைகள் கிடையாது. அனைத்தும் வாழவியலோடு பினைந்த உண்மைகள்தான். அருவருப்பு மிக்க கதைகள் அனைத்தும், ஆரியர்களுடையது. அப்படி அவர்களைப் பார்த்துத்தான், பாவிகாள், ஏழைகாள் என வசை பாடுகிறார். இருத்துருத்தி மெய்யினால் என்றால், உள் மூச்சு வெளி மூச்சு, இரண்டையும் துருத்தி , ஐம் பூதங்களையும், சமன்படுத்தி சிவந்த மெய்யினால், நம் உருக்குழைக்கும் உயிர் ஆற்றலையும், உணர்ந்து உணர்ந்து இறைவனை உணர்வோம் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments