71. திருவரங்கமும், பொருந்தி என்புருகி நோக்கிடீர்,
உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஓர்கிலீர்.
கருவரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்த பின்,
திருவரங்கம் என்று நீர் தெரிந்து இருக்க வல்லீரேல்.
கருப்பையில் நம் திரு உருவம் , உடலெடுக்க அரங்கேறும் இடம் திரு அரங்கம். அந்த திருவரங்கம் பொருந்தி என்புருக நோக்கிடீர்.அந்த திரு அரங்கத்தில் நடந்த நிகழ்வினால் கருத்தரித்து உருவரங்கம் ஆகும். உண்மையை நீர் அறியவில்லை. ஒவ்வொரு செல்லாக உருவெடுத்து | உருவெடுத்து கருவரங்கமாக, அற்புதமாக வடிவெடுத்த நம் திருமேனியின் உண்மையை நீர் தெரிந்து ஆச்சரியம் கொண்டு இருக்க வேண்டும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments