108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?

108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு?

108 க்கும் நிலாவுக்கும் பூமிக்கும் சூரியனுக்கும் என்ன தொடர்பு. சூரிய முழு கிரகணத்தன்று சூரியனை நிலா முழுதுமாக மறைத்து உடனே விலகுகிறது. இந்த நிகழ்வில் சரியாக நிலவின் வட்டமும், சூரியனின் வட்டமும் பொருந்துகிறது. அதை நாம் பூமியில் இருந்து பார்க்கிறோம். அப்படி சரியாக பொருந்த வேண்டும் என்றால் நம் பூமியின் விட்டத்தை விட சூரியனின விட்டம் 108 மடங்கும், நிலாவின் விட்டம் நம்மை விட 3.58 மடங்கு சிறியதாக இருந்து, நமக்கும் சூரியனுக்கும் இடையே வந்தால் தான், நிலாவின் வட்டமும் சூரியனின் வட்டமும் சரியாக பொருந்தும். நிலாவின் விட்டம் பூமியின் விட்டத்தை விட 3.58 சிறியதாக இருப்பதை எப்படி கண்டு பிடித்தார்கள் என்றால் முழு சந்திர கிரகணத்தன்று பூமியின் நிழல் நிலவை முழுதும் மறைத்து விலக எடுக்கும் காலம் 3 மணிநேரம் 58 நிமிடங்கள். பூமியின் விட்டத்தை விட நிலவின் விட்டம் 3.58 மடங்கு சிறியதாக இருப்பதால்தான் அவ்வளவு நேரம் கிரகணம் நடக்கிறது.

பூமியின் சுற்றளவு = 111 x 360 = 39,960 கிமீ
பூமியின் விட்டம் = 39,960/3.14 = 12,726 கிமீ

முழு சந்திர கிரகணத்தன்று பூமியின் நிழல் சந்திரனை மறைக்கும் மொத்த நேரம் 3.58 நிமிடங்கள்
நிலவின் விட்டம் = பூமியின் விட்டம்(12,726) / 3.58 நிமிடங்கள் = 3,555 கிமீ
நிலாவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் = நிலவின் விட்டம்(3,555 கிமீ) x 108 = 3,83,916 கிமீ
பூமியை நிலா சுற்றும் சுற்றுப்பாதையின் தூரம் = நிலாவுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம்(3,83,916 கிமீ) x 2×3.14 = 24,10,992 கிமீ
நிலா ஒரு நாள் கடக்கும் தூரம் = 24,10,992 கிமீ / 27 நாட்கள் = 89,296 கிமீ
நிலா ஒரு மணி நேரத்தில் கடக்கும் தூரம் = 89,296 கிமீ / 24 மணி = 3,720 கிமீ/ஒரு நாள்
நிலா ஒரு நிமிடத்தில் கடக்கும் தூரம் = 3,720 கிமீ / 60 நிமிடம் = 62 கிமீ/நிமிடம்
நிலா ஒரு வினாடியில் கடக்கும் தூரம் = 62 கிமீ / 60 வினாடி = 1.03 கிமீ/வினாடி

சூரியனின் விட்டம் = பூமியின் விட்டம்(12,726 கிமீ) x 108 = 13,74,408 கிமீ
பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் = சூரியனின் விட்டம்(13,74,408 கிமீ) x 108 = 14,84,36,064 கிமீ
சூரியனை பூமி சுற்றும் பாதையின் தூரம் = 2 x 3.14 x 14,84,36,064 கிமீ = 93,21,78,482 கிமீ
சூரிய சுற்று பாதையில் பூமி ஒரு நாள் கடக்கும் தூரம் = 93,21,78,482 கிமீ / 365.25 நாட்கள் = 25,52,165 கிமீ/ஒரு நாள்
சூரிய சுற்று பாதையில் பூமி ஒரு மணி நேரத்தில் கடக்கும் தூரம் = 25,52,165 கிமீ / 24மணி = 1,06,340 கிமீ/ஒரு மணி
சூரிய சுற்று பாதையில் பூமி ஒரு நிமிடத்தில் கடக்கும் தூரம் = 1,06,340 கிமீ / 60 நிமிடம் = 1,772 கிமீ/ ஒரு நிமிடம்
சூரிய சுற்று பாதையில் பூமி ஒரு வினாடியில் கடக்கும் தூரம் = 1,772 கிமீ / 60 வினாடி = 29.5 கிமீ/ஒரு வினாடி.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *