70. அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்.
திரியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்.
உரியிலே தயிர் இருக்க, ஊர் புகுந்து வெண்னை தேடும்.
அறிவிலாத மாந்தரோடு, அனுகுமாற தெங்கனே !
மனிதர்களின் அறிவினால் பிறந்த ஆகமங்களை நன்றாக ஓதுகின்றீர்கள். ஆனால் திரியாகிய நம் தலை உச்சியில் மயங்கி இருக்கின்ற , நேர்மையான இறைவனை நீங்கள் அறியாதவராக இருக்கிறீர்கள். இது எப்படி இருக்கிறதென்றால், நம் வீடுகளில் உரியில் தயிர் இருக்க, ஊருக்குள் போய் வெண்ணெய் தேடி அலைந்து கொண்டு இருப்பது போல் உள்ளது. இப்படி அறிவில்லாத மாந்தரோடு கூடி வாழ்வது எப்படி? என கேட்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments