சிவவாக்கியம் பாடல் 69 – ஆத்துமா அநாதியோ?

சிவவாக்கியம் பாடல் 69 – ஆத்துமா அநாதியோ?

69. ஆத்துமா அநாதியோ? அநாத்துமா அநாதியோ?
பூத்திருந்த ஐம்பொறி, புலன்களும் அநாதியோ?
தாக்கம் மிக்க நூல்களும், சதாசிவம் அநாதியோ?
வீக்க வந்த யோகிகாள், விரைந்துரைக்க வேணுமே?.

ஆத்மா, பரமாத்மா, அநாத்மா என எவருக்கும் புரியாமல், பல விளக்கங்கள், கொடுத்தாலும், யாரும் அறிந்து கொள்ள முடியாத அவை அநாதியா என கேட்கிறார். அநாதி என்றால் அதற்கு தோற்றம் இல்லை என அர்த்தம். ஆதி இல்லாதது தான் அநாதி. பூத்திருந்த ஐம்பொறி, புலன்கள் என்றால் கர்ப்பபைக்குள் இருந்த கருமுட்டையை ஊடுருவி , நுழைந்த வேல் போன்ற வடிவில் இருந்த உயிர், பூத்து, மலர்ந்து உடலாகிறது. அப்படி ஊடுருவிய உயிர்தான், வேல் வடிவில் வளைந்து , நெளிந்து கரு முட்டையை ஊடுருவும். அந்த வேல் வடிவில் இருப்பது தான், முதுகெலும்பாக உருமாறுகிறது. அந்த வேல் வடிவம் , வளைந்து, நெளிந்து செல்லும் ஆற்றல் தான் உயிர். அந்தவேல் வடிவம் கருமுட்டையில் ஊடுருவி, தாயின் இரத்தத்தை , எடுத்துக் கொண்டு, பூத்து ஐம்பொறிகளாக உருவெடுக்கிறது. வேல் முனை தலையாகவும், வால் கால்களாகவும், ஆறு முடிச்சுகளாக, நரம்பு, சதை, எலும்பு என குழந்தையாக உருவெடுக்கிறது. அதற்குள்ளே ஐம்புலன்களும் உருவாகிறது. இவையெல்லாம், அநாதியா என கேட்கிறார். இம்மாதிரி உண்மையான செய்திகளையும், பொய்யான செய்திகளையும், கொண்ட தாக்கமிக்க நூல்கள் அநாதியா என கேட்கிறார். ஆறாவது சக்கரமான ஆஞ்ஞா சக்கரத்தின் கடவுள் சதாசிவன் அநாதியா எனவும் கேட்கிறார். அநாதி எது? என வயிறு வீங்கிய யோகி, வீக்கம் வந்த யோகிகளைப் பார்த்து விரைந்துரைக்க வேண்டும் என கேட்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *