68. உருவும் அல்ல ,வெளியும் அல்ல, ஒன்றை மேவி நின்றதல்ல.
மருவு வாசல் சொந்தமல்ல, மற்றதல்ல , அற்றதல்ல.
பெரியதல்ல , சிறியதல்ல, பேசலான தானுமல்ல,
அறியதாகி நின்ற நேர்மை, யாவர் காண வல்லரே!
இறைவனைப் பற்றிக் கூறுகிறார். அவர் உருவமல்ல, அப்படி என்றால் உருவம் இல்லாத வெளியாக அருவமாக இருப்பாரா என்றால் , வெளியும் அல்ல என்கிறார். எதையாவது பற்றி அல்லது ஊடுருவி , நிற்குமா என்றால் இல்லை என்கிறார்.
புணரும் வாசல் சொந்தமல்ல, மற்றதல்ல (ஆணுமல்ல, பெண்ணுமல்ல என்பதைத்தான் அப்படி கூறுகிறார். )வேறு ஏதாவது, அற்றுப் போனதும் அல்ல, ஏதாவது பெரியதாய் இருக்குமா? அல்லது சிறியதாய் இருக்குமா? அதுவும் இல்லை என்கிறார். பேசக்கூடிய ஏதாவது உயிரினமாக இருக்குமா? இல்லை என்கிறார். அறியதாகி நின்ற நேர்மையை, யாவர் காண்கிறார்களோ, அவர்களே வல்லவர்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments