66. ஐம்பத்தொன்றில் அக்கரம், அடங்கலோர் எழுத்துமோ,
விண் பறந்த மந்திரம், வேதம் நான்கும் ஒன்றலோ?
விண் பறந்த மூல அஞ்செழுத்துலே, முளைத்ததே.
அங்கலிங்க பீடமாய், அமர்ந்ததே சிவாயமே!
ம் எனும் மந்திரம், அதிர்வாக , எண்ண அலைகளாகவும், இந்த உலகில் வாழும் உயிரணங்களின், அனைத்து , செய்திகளையும், அண்டம் பற்றிய அனைத்து செய்திகளையும் , உள்ளடக்கி , விண்ணில் பறந்து கொண்டுள்ளது. ஐம்பத்தொன்று என்பது 7வது சக்கரத்தைக் குறிப்பது. மூலாதாரம்+ 5 + 1. அந்த ஊமை எழுத்தான ம் அண்டம் எங்கும் பறந்து ,நம்மோடும், ஆழ்மனமாக இணைந்துள்ளது. வேதம் நான்கும் ஒன்றலோ என்றால், புறத்தேவைக்காக உருக்கு, அதிர்வன, சாம, ய சூரண என நான்கு வேதியல்கள் நம் சிவனால் வடிவமைக்கப்பட்டது. அதே போல் நான்கு வகையான பிறப்புகள் இறைவனால் படைக்கப்பட்டது. அது வேதம். அதிலிருந்து வேதியல். நான்கு வகையான பிறப்பு என்பது புழக்கத்தால் படைக்கப்படும், புழ பூச்சிகள். விதைகளால் உருவாகும், மரம் செடி கொடிகள். முட்டையால், உருவாகும், பறவைகள், பல்லி, பாம்பு , மீன்கள் போன்றவை, குட்டிபோட்டு உருவாகும் உயிரினங்கள் என நான்கு வகையான படைத்தலையும் வேதம் என்று தான் கூறுவார்கள். இந்த நான்கு வகை பிறப்பிலும் , சூடு, அதிர்வான நாதம், ஆண் பெண் இனையும் அரசியல், விதை, முட்டை எல்லாம் இருக்கும். அதைத்தான் வேதம் நான்கும் ஒன்றலோ என்கிறார். விண்ணில் அண்ட வெடிப்பால் பறந்து உருவாகிய உலகம், அகிலம், புவனம், உயிர்கள் அனைத்தும் உருவானது அந்த மூல ஐந்து எழுத்துக்களான , நமசிவாய மந்திரங்களால் தான். கருமுட்டையுடன்,, விதையாக இருந்து உயிரான சிவாயம் , அங்கலிங்க பீடமாய் அமர்ந்து உடலாக உருவெடுக்கிறது, என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments