65.இருக்க வேணும என்ற போது, இருக்கலாய் இருக்குமோ!
மறிக்க வேணும் என்றலோ? மண்ணுலே படைத்தன.
சுறுக்கமற்ற தம்பிரான், சொன்ன அஞ்செழுத்தையும்,
மறிக்கு முன் வணங்கிடீர், மருந்தெனப் பதம் கெடீர்.
நாம் இந்த பூமியில், எத்தனை நான் வாழ வேண்டும் என நினைத்தால், அதன்படி நம்மால் வாழ முடியுமா? நாம் பிறக்கும் போதே , நாம் இறந்து போகும்படி தான், நாம் படைக்கப் படுகிறோம். அந்த வயது வந்தால் இறந்து போய் விடுவோம். சுருக்கமற்ற தம்பிரான் ஆகிய இறைவன் சொன்ன அந்த அஞ்சு எழுத்தையும், நன்கு அர்த்தம் புரிந்து வணங்கினால், நம் உடலை மருத்து கொண்டு பதப்படுத்தியது போல் பதம் கெடாமல் பாதுகாக்கப்படும் என சொல்கிறார். நாம் நினைத்த போது இறக்க முடியும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments