சிவவாக்கியம் பாடல் 62 – கண்டு நின்ற

சிவவாக்கியம் பாடல் 62 – கண்டு நின்ற

62. கண்டு நின்ற மாயையும், கலந்து நின்ற பூதமும்,
உண்டு உறங்குமாறு நீர, உணர்ந்து இருக்க வல்லீரேல்.
பண்டை ஆறும் , ஒன்றுமாய், பயந்த வேத சுத்தனாய்,
அண்ட முக்கி ஆகி நின்ற, ஆதி மூல மூலமே.

நம் கண்ணால் காண்பதும் பொய் என்பது எதை குறித்து சொல்லப்படுகிறது, என்றால் , நமக்கு இறைவனின் மறைத்தல் எனும் தொழிலால் , மாயையாக காட்சிகள் இருக்கும். உதாரணமாக. தினமும் சூரியன் உதிப்பதும், நகர்ந்து மேற்கே மறைவது போல் தோன்றும். ஆனால் அது உண்மையல்ல, அறிவால் யோசித்தால் மட்டுமே, நாம் தான் பூமியுடன் சேர்ந்து ,24 – மணிநேரத்தில் சுற்றிக் கொண்டு இருப்பது புரியும். இப்படி நம் வாழ்வில் , தினமும் மாயைகள் நம் கண முனனே, நிறைய நடக்கும். அது மாயை என்ற உண்மையை பரிந்து கொள்ள வேண்டும். அதே போல் நம் உடலில் கலந்துள்ள 5 பூதங்களையும் அறிந்து கொண்டு, வாதம்,பித்தம், கபம் என்பதை தெரிந்து நலமாக வாழ முடியும். நாம் எப்படி தினமும் . சாதாரணமாக , உண்டு உறங்குவது போல், மாயையும், நம் உடல் இயக்கங்களையும் புரிந்து இருந்து கொண்டு இருந்தால், நம் உடலின் பண்டை ஆறு சக்கரங்கள் அதாவது நமது உடலைப் பற்றிய அறிவு , ஏழாவதான சக்கரமான அண்டம் பற்றிய அறிதலையும் கொண்ட இறைவன், நமக்கு புற தேவைக்கு பயன் தரக்கூடிய நான்கு வேதங்களை, நமக்கு சிவன் மூலமாக தந்த சுத்தனாய், அண்டத்தைப் பற்றிய அத்தனை செய்திகளையும் அறிந்தவன், ஆதி மூலமான மூலம் , நம்முடன் இணைந்து இருப்பான் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *