சிவவாக்கியம் பாடல் 61 – கழுத்தையும் நிமிர்த்தி

சிவவாக்கியம் பாடல் 61 – கழுத்தையும் நிமிர்த்தி

61. கழுத்தையும் நிமிர்த்தி, நல்ல கண்ணையும் விழித்து நீர்,
பழத்தவாய் விழுந்து போன , பாவம் என்ன ? பாவமே!
அழுத்தமான வித்திலே, அனாதியாய் இருப்பதோர்,
எழுத்திலா எழுத்திலே ! இருக்கலாம், இருந்துமே !

இப்பொழது மட்டுமல்ல , 1200 வருடங்களுக்கு முன்னரே , இறைவனை அடைய பயிற்சியும் முயற்சியும் என ஆரம்பித்து விட்டார்கள். அதைத்தான் தியானம் , மூச்சுப்பயிற்சி என்ற பெயரில் கழுத்தை நிமிர்த்தியும், கண்ணை மேல் நோக்கி விழித்து என முயற்சி செய்து , செய்து பழத்துப்போய், இறைவனை அடைய முடியாமல் மாண்டு போன பாவம் என்ன பாவமோ? என வருத்தப் படுகிறார். நிறைய செய்திகளைக் கொண்ட அழுத்தமான சிறிய விதையிலே, அனாதியாக இப்பது யார்? இந்த கேள்விக்கு விடையறிந்தால் , இறைவன் அருகில் சென்று விடலாம். எண்ணம் போல் வாழ்க்கை என்றால், நாம் நமது வாழ்வை எப்படி நினைத்து வடிவமைக்கிறோமோ, அப்படி அமையும். சூழ்நிலைகள் இறைவனால் அமைத்துத் தரப்படும். இப்படி ஒவ்வொரு தனித்தனி , தனித்துவமான மனிதர்களின் எண்ணங்கள் அனைத்தும் வடிவமைக்கப்படும் போது முரண்கள் வந்தால், நாம் தான் அதை நம் அறிவால் களைய வேண்டும். அந்த அறிவின் செய்தியும், அவனைக் கொண்டு தான் அறியமுடியும். அவன் அதிர்வாக சத்தமாக வெளியில் நம்மோடு இனைந்து உள்ளான். ஒலி தான் அவன் நம்மோடு உரையாட அவன் அதிகம் தேர்ந்தெடுக்கும் முறை. காட்சிகள் , வாசனை, சுவை, மற்றும் தொடு உணர்ச்சிகளை விட அவன் நம்மோடு தொடர்பு கொள்ள அதிர்வுகளைக் கொண்ட உரையாடல்கள் தான். அதற்குத் தான் தமிழில் இவ்வளவு வார்த்தைகள் உருவாக்கப் பட்டுள்ளது. ஒலி வடிவங்கள் எழுத்து வரி வடிவங்களில் , நிதானமாக 20,000 வருடங்களாக , பல்வேறு கடவுளர்களால் , வடிக்கப் பட்டுள்ளது. நமக்குத் தேவையான போது, நம்மோடு உரையாடும், அதை நாம் அறியாமல், வெளியே விடை தேடி சோர்ந்து போய்க் கொண்டுள்ளோம். அதை விவரித்து எதாவது எழுத்திலே சொல்லி புரிய வைக்க முடியுமா? என்றால் அதை விவரிக்க எழுத்தே கிடையாது. அதைத்தான் எழுத்திலா எழுத்திலே அனாதியாக இருக்கிறான் என அதையும், சொல்ல முடியாமல் , இருக்கலாம், இருந்துமே என்கிறார். அவனை உணர்ந்து , பற்றிக் கொள்வது எப்படி என்பதைத்தான் , படிப்படியாக நமக்கு புரிய வைக்க முயற்சிக்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *