சிவவாக்கியம் பாடல் 61 – கருவிருந்த வாசலால்

சிவவாக்கியம் பாடல் 61 – கருவிருந்த வாசலால்

61.கருவிருந்த வாசலால், கலங்குகின்ற ஊமைகாள் ,
குருவிருந்து சொன்ன வார்த்தை, குறித்து நோக்க வல்லீரேல்.
‘உருவிலங்கு மேனியாகி, . உம்பராகி நின்று நீர்,
திரு விலங்கு மேனியாகி , சென்று கூடலாகுமே!

குருத்து என்றால் முளைத்து வெளிவருவது. தலை உச்சியில், குரு குருவென்று , ஒரு உணர்வு தோன்றுவதைத்தான், குருவிருந்து அதாவது உச்சியிலிருந்து, நம் சிந்தைக்கு , சொல்லும் வார்த்தைகளை குறித்து நோக்கி அதன் வழி நடந்தீர்கள் என்றால், உருவிலங்கு மேனியாக உப்பலாக, இருக்கும் நீங்கள், நடப்பவைகளையும், நடந்தவைகளையும், அறிந்து, திரு விலங்கு மேனியாகி சென்று கூடலாகுமே! கருத்தரித்து உடல் உருவாகும் வாசலை , காமத்தால் நோக்கி, கலங்குகின்ற ஊமைகாள், அப்படி அதை காமம் கொண்டு நோக்காதீர்கள் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *