57. போதடா வெழுந்ததும், புணலதாகி வந்ததும்,
தாதடா புகுந்ததும், தானடா, விளைந்ததும்,
ஓதடா , ஐந்தும் மூன்றும், ஒன்றதான வக்கரம்,
ஓதடா விராம ராம ராம என்னும் நாமமே!
விரா என்றால் , அர்த்தம் இல்லாத சத்தம் (noise). அந்த அர்த்தமில்லாத சத்தமான ராம ராம எனும் நாமத்தை ஓதும் உன் உடல் உருவாக காரணமான, மந்திரமான ஐந்து எழுத்தையும், மூன்று எழுத்தையும், இவையெல்லாம் ஒன்றினைந்து உருவான அக்கரத்தை அறிந்து கொள்ளாமல் இருக்கிறாயே! ஆணின் விறையில் இருந்து எழுந்து , புணதலாகி உயிராகி, பெண்ணின் கருமுட்டையான தாதுவில் நுழைந்து, தானாக விளைந்ததும் காரணம் இந்த அஞ்சும் மூனும் ஒன்றதான அக்கரம். அர்த்தமுள்ள இந்த மந்திரங்களைச் சொல்லாமல, அர்த்தமற்ற, சத்தமான ராம ராம என்ற நாமத்தை ஓதடா என அங்கலாய்க்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments