56. உற்ற நூல்கள், உம்முள்ளே. உணர்ந்து, உணர்ந்து பாடுவீர்.
பற்று அறுத்து, நின்று நீர், பராபரங்கள் எய்திலீர்,
செற்றமாவை உள்ளரைச் செருக்கருத்து இருத்திடில்,
சுற்றமாக உம்முளே, சோதி என்றும் வாழுமே.
எண்ணம் போல் வாழ்க்கை, என்பதுதான் உண்மை. அதுதான் நம் அனைவருக்கும், நடந்து கொண்டுள்ளது. ஆனால், நம்முள் ஆழ்ந்து நம் எண்ணங்களை வடிவமைக்காமல், அடுத்தவரின் எண்ணங்களுக்கு வேலை செய்து கொண்டுள்ளோம். நம்முள் நம் வாழ்க்கைக்குத் தேவையான செய்திகள், நூல்கள், அனைத்தும் உள்ளது. நமக்குத் தேவையான போது, நமக்கு உரைக்கும். அதை உணர்ந்து உணர்ந்து , அதன் வழி நடந்தால் , அடையும் இன்பம், நினைத்து பாடுவீர் என்கிறார். பராபரம் என்றால் இறைவன். பற்று அறுத்து நின்று பெரிய காரியங்கள் செய்து, இறைவனை அடைய முடியாமல் இருக்கிறீர்கள். ஆனால் தீர்க்க முடியாத பழைய வினைகளைக் கூட, உள்ளிருந்து இல்லாமல் செய்து விடுவான்., நாம் ‘ செருக்கறுத்து இருந்தால் , நம் சுற்றத்தவர் போல் இறைவன் , எப்பொழுதும் நமக்கு கூட இருந்து, நம்மை வழிநடத்துவான்.
Tags: சிவவாக்கியம்
No Comments