55. எத்திசைக்கும், எவ்வுயிர்க்கும், எங்கள் அப்பன், எம் பிரான்.
முக்தியான வித்துளே, முளைத்தெழும் தவச்சுடர்.
சித்தமும் தெளிந்த, வேத கோவிலும் திறந்த பின்.
அத்தன் ஆடல் கண்டபின், அடங்கலாடல் காணுமே!
விதையின் உள்ளே , அந்த விதை முளைத்து, பெரிய மரமாக மாறி, அது விதை உண்டு பண்ணக் கூடிய அனைத்து செய்திகளையும் உள் அடக்கிய முக்தி அதனுள் உள்ளது. அதேபோல் தான் , எந்த உயிர்களும் , விளையக் கூடிய வித்தின் உள்ளே, அந்த உயிரின் அனைத்து செய்திகளையும் உள் அடக்கி இருக்கும். விதை, காய்ந்து உள்ள போது முளைக்காது. அது நீரில் ஊறினால் முளைத்து எழும். அதுதான் முளைத்தெழும் தவச்சுடர், எத்திசையாய் இருந்தாலும், எந்த உயிர்களாக இருந்தாலும், உயிர் உருவாதலும், உடல் விளைவதும், ஒரே விதிதான் (Formula). இந்த உயிர் உருவாதல், உயிர் வாழ்தல், உயிர் அடங்குதல் போன்ற நடைமுறைகளை, உள்ளது உள்ள படி . விளங்கிக் கொள்வது தான் சித்தம் தெளிதல், இந்த சித்தம் தெளிந்தால், நான்கு வேதங்களான, உருக்கு, அதிர்வன, சாம, யசூரண போன்ற புறத் தேவைக்கு உண்டான அறிவும் திறக்கும். பின், நம்முடைய மணம் தெளிந்து, ஆடல் காணும். பின் அடங்கிவிடும், நிதானமாக இருக்கும்.
Tags: சிவவாக்கியம்
No Comments