சிவவாக்கியம் பாடல் 54 – தில்லை நாயகன்

சிவவாக்கியம் பாடல் 54 – தில்லை நாயகன்

54. தில்லை நாயகன் அவன், திருவரங்கனும் அவன்,
எல்லையான புவனமும், ஏக முக்கி ஆனவன்,
பல்லு, நாவு உள்ள பேர், பகுத்துக் கூறி மகிழவார்.
வல்லபங்கள் பேசுவார், வாய் புழத்து மாய்வரே!

சிவன், முருகன், கிருட்டிணன், திருமால் போன்றோர் நம்முடன் வாழ்ந்து , நமக்கு இயற்கையின் அறிவை நம்மோடு வாழ்ந்து, சொல்லிக்கொடுத்த கடவுளர்கள். ஆனால் இறைவன் என்பவன் நம் உடலில் அதாவது தில்லையில் தங்கி இருப்பவன். நாம் ,நம்முடன் இருக்கும், அவனை அறியாமல் இருக்கிறோம். நம் உயிர் உடல் எடுக்கக் காரணமான திருஅரங்கமும் அவன் தான். புவனம் என்பது, நாம் இரவில் வானத்தைப் பார்த்தோமானால், தெரியும் அவ்வளவு விண் மீன்களும் நம் புவனத்தைச் சேர்ந்தது .அதாவது Cluster. அதற்கு எல்லையுண்டு. என்கிறார். நம் பால் வெளியின் நான்கு கரத்தில், ஒவ்வொரு கரத்திலும் அனேக புவனங்கள் உண்டு. அதே போன்ற ஒரு புவனத்தில், ஒரு குடும்பம் தான் நம் சூரிய குடும்பம். முக்தி என்றால், ஒரு குறிப்பிட்ட துறையில் வெகு நுட்பமான அறிவு பெற்றால் அவர்களை ஞானி என்கிறோம். ஆனால் இவ்வண்டத்தின், அனைத்துத் துறைகளிலும் முத்தி பெற்றவன், ஏகமுக்கி பெற்றவனும் இறைவன் தான். இப்படி நம்முள்ளேயும், வெளியேயும் எங்கும் நிறைந்து இருப்பவன் ஒரே இறைவன்தான். அவனை பல்லும், நாவும் உள்ள பேர் பகுத்து, பகுத்து இவன், அவன் என பகுத்துக் கூறி , மகிழ்வார். அவனுடைய சாகசங்களை , வேறு, வேறாக, கூறுவார் எல்லோரும் வாய் புழத்து மாய்வார்கள் என கூறுகிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *