சிவவாக்கியம் பாடல் 53 – நாழி அப்பும்

சிவவாக்கியம் பாடல் 53 – நாழி அப்பும்

53. நாழி அப்பும், நாழி உப்பும், நாழி ஆன வாறு போல்.
ஆழியோனும், ஈசனும், அமர்ந்து , வாழ்ந்து இருந்திடம்.
ஏறிலேரும் ஈசனும், இயங்கு சக்ர தரனையும் , வேறு கூறு பேசுவார், வீழ்வர் வீண் நரகிலே!

நமக்கு இயற்கையையும், விண்ணில் தெரியும், கோள்களையும், நமது சூரிய குடும்பத்தையும், நம் பால்வெளியின், மையப்பகுதியான, சிவத்தையும், 20,000 வருடங்களுக்கு முன்பே அடையாளம் காட்டி , சொன்னதால், அவருக்கு சிவன் என்றும், ஆதிநாதன் என்றும், ஈசன் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டார். அவர் உரைத்ததை, பல்வேறு சித்தர்கள் தரவுகளுடன், நிரூபித்துக் கொண்டே வந்திருந்தாலும், எகிப்தில் Pyramid கட்டி, அங்கேயே , பல்வேறு தலைமுறைகளாக , தங்கி , சீவசமாதி அடைந்து, 2000 வருடங்கள் எடுத்த தரவுகளின் அடிப்படையில் தான் திருமாலால் பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டு, சிவனின் கூற்றுக்கள் , உண்மை என , மூன்று Pyramid களையும், Spinx எனும், சிவத்தையும் அடையாள படுத்தி, அவைகள் 3,600 வருடங்களுக்கு முன் படைக்கபட்டது. இதைத்தான், ஆழியோனும், ஈசனும், அதாவது, சிவனும், திருமாலும் அமர்ந்து, வாழ்ந்து இருந்திடம். என்கிறார். அதாவது அவர்கள் நம்முடன், அமர்ந்து, நம்முடன் வாழ்ந்தவர்கள் என்கிறார். அவர்களின் வரலாறை அழிக்க 2000 வருடங்களுக்கு முன் இங்கே வந்து நம்மைப் பிரிக்க சைவம் என்றும் வைணவம் என்றும் , பிராமணர்களே இரு புறமும் நின்று கொண்டு சண்டை இட்டுக் கொள்வார்கள். சிவன்தான் பெரியவன், திருமால் தான் பெரியவன் என்று. இது புரியாமல், நமது ஆட்களும் பணத்திற்காக அவர்களுடன் சேர்ந்து சைவம் தான் பெரியது, வைணவம்தான் பெரியது என்று. அதைத்தான் நமது முன்னோர்கள் அரியும், சிவன் சொல்லும் கருத்துக்கள், ஒன்று தான், அது புரியாதவன் வாயிலே மண்ணு. என்று சொன்னார்கள். ஏறு என்றால் எருதில் ஏறும் சிவனும், நான்கு கரங்களைக் கொண்ட , பால் வெளியின் ‘அடையாளத்தை கொண்ட சங்குசக்கர தரனையும், வேறுபடுத்திப் பேசுபவர்கள் வீழ்வர் வீண் நரகத்தில் என்கிறார். இப்படி வரலாறுகளை மறைத்து இன்றும் , கொட்டம் அடித்துக் கொண்டுள்ளார்கள். 8 ஆழாக்கு சேர்ந்தால் ஒரு நாழி இது அளவு. ஒரு நாழி மணல் அல்லது நீர் ஒரு குடுவையில் எடுத்து , குடுவையின் கீழ் ஒரு ஊசியில் துலையிட்டு அது ஒழுகுவதற்கு, ஒரு நாழிகை நேரம் எடுப்பது மாதிரி இரு வகையான கருவிகள் உள்ளன. அப்பு என்றால் நீர், உப்பு என்றால் மனல். எதையெடுத்து அளந்தாலும் ஒரு நாழிகை (24 நிமிடம்) கணக்குதான். அதே போல் தான் திருமாலும், ஈசனும் சொன்ன கருத்துக்கள் ஒன்று தான். அந்த காலத்தில் ஈசன் சொன்னதை இங்கே இந்த காலத்தில் நீரூபித்தார். அதற்காக அவர் பெரியவர், இவர் சிறியவர் என விவாதிப்பதெல்லாம் மூடத்தனம்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *