52. இடது கண்கள் சந்திரன், வலது கண்கள் சூரியன்.
இடக்கை சங்கு சக்கரம், வலக்கை சூழ மான் மழ,
எடுத்த பாதம், நீள்முடி, எண் திசைக்கும் அப்புறம்,
உடல் கலந்து நின்ற மாயம், யாவர் காண வல்லரே!
ஓரியன் Constellation யாரெல்லாம் , வானத்தில் பார்த்துள்ளீர்களோ, அவர்களுக்குப் புரியும், அதில், திருவாதிரை நல் சித்திரமும், மிருகசீரிசம் எனும் மான் தலை நல்சித்திரமும் , அந்த உலக்கை (மூன்று விண்மீன்கள் வரிசையாக சொலிக்கும்) மீண்களுக்கு வலது புறமாக இருக்கும். இடது புறத்தில், நமது பால் வெளியின் மையமான சிவம், கண்களுக்குத் தெரியும், அது சங்கு சக்கரம் போல இருக்கும்.. அதைத்தான் சிவவாக்கியர், இடக்கை சங்கு சக்கரம், வலக்கை சூழமான் மழ என்கிறார். அந்த மான்தலை நல்சித்திரம், பார்க்க மான் தலை மாதிரி கோடாரி வடிவில் இருக்கும். அதே போல் நாம் வட திசையில் இருந்து பார்த்தால், சூரியன் சுற்றுப் பாதை வலதுபுறமாகவும், நிலாவின் சுற்றுப்பாதை இடது புறமாகவும், ஒன்றுக் கொன்று எதிர்திசையில் இருக்கும், அதுதான் இடது கண்கள் சந்திரன், வலது கண்கள் சூரியன் என்பார். அது என்ன இடது கண்கள், இடது புறம் ஒரு கண்தானே இருக்கிறது. ஏன் கண்கள் என்கிறார். ஏனென்றால், கண்கள் என்றால் துலை என்று பொருள். இடது புறம் கண், மூக்ககின் இடது நாசி சோமன் என்பர், அதே போல் இடது காது துளை இதை யெல்லாம் சேர்த்துத்தான் இடது கண்கள் என்கிறார் .வலது கண்கள் என்றாலும், வலது கண், வலது நாசி அருக்கன் , வலது காது. நிலா குளிர்ச்சி.. சூரியன் சூடு. இடது நாசியில், உள்ளே செல்லும் காறறு குளிர்ச்சியாகவும், வலதுபுற நாசியில் வெளி செல்லும் காற்று உள்ளிருந்து வெளியேறும் காற்று சூடாகவும் இருப்பதை குறிக்கும்.அதே போல் எடுத்த பாதம் , நின்ற பாதம் என்பது, வலக்கை. இடக்கை இந்த நான்கும், நம் பால் வெளி, அண்டத்தின் நான்கு கரங்கள். அதில் நின்ற பாதம் என்பது, நாம் ஒரு கரத்தில் நம் பூமியில் நின்று கொண்டு இந்த அடைவெளியைப் பார்க்கிறோம் என்பதையும், எடுத்த பாதம் என்பது , மற்ற கரங்களை குறிக்கவும் உள்ளது. அதே போல் , தலையில் உள்ள நீள் முடி , எண் திசையிலும் பறந்து விரிந்துள்ள பேரண்டத்தை குறிக்கவும், இப்படி அண்டத்தை , இந்த பிண்ட வடிவத்தில் யார் காண முடியுமோ, அவர்கள் வல்லவர்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments