51. ஆடு காட்டி வேங்கையை, அகப்படுத்துமாறு போல்,
மாடு காட்டி என்னை நீ, மதிமயக்கலாகுமோ!
கோடு காட்டி யானையை, கொன்று உரித்த கொற்றவா !,
வீடு காட்டி என்னை நீ , வெளிப் படுத்த வேனுமே!.
ஐம்புலன்களையும், நம் சித்தர்கள், யானைக்கு ஒப்பிடுவார்கள். அந்தப் புலன்கள் , குட்டி யானைகள் போல் அமைதியாகவும் இருக்கும், மதம் கொண்ட யானைகள் போலவும், என்ன செய்கிறோம் என தெரியாமல், நாசங்களை ஏற்படுத்தி விடும். கோடு என்றால் மலை உச்சி. அதேபோல் நம் உடலின் உச்சியில் , காற்றின் அதாவது வாசியின் உதவியால், மேலே ஏறி ஐம்புலன்களான யானையை அடக்கி , கொன்று உரித்த கொற்றவன், யாரென்றால். நமக்கு ஆதியில் 20000 வருடங்களுக்கு முன்பே, இயற்கையை உணர்ந்து நமக்கு நான்கு வேதியல்களை சொல்லிக் கொடுத்த, நம்மோடு வாழ்ந்து, கடவுளாக, சீவ சமாதி அடைந்த சிவன். குழந்தைகளுக்கு புரிய வைப்பதற்காக, நாம் கட்டமைத்த சிறு சிறு கதைகளை, ஆரியர்கள் அருவருக்கத்தக்க கதைகளாக்கி தலை முறை தலை முறைகளாக கடத்தி , நம்ப வைத்து சீவ சமாதி அடைபவர்களை தடம் மாற்றிக் கொண்டுள்ளார்கள். ஆடுகளை கூண்டுக்குள் அடைத்து, பெரிய வேங்கையை அகப்படுத்துமாறு போல், என் மாடு , மனைவி, மக்கள், செல்வம் என மாயையால் மதிமயக்கி , இறைவனை அடைய முடியாதபடி செய்யும் இறைவனை , பிறப்பில்லாத வீடு காட்டி என்னை , அதாவது உன்னை எனக்கு வெளிப்படுத்த வேண்டுகிறேன். என கூறுகிறார். இப்படி மாடு, மனைவி ,சுற்றம், செல்வம் என இருந்தாலும், தீவினைகள் ஆற்றாமல் , நம் 74 வயதில் துறவறம் எனும் பொது வாழ்க்கைக்கு வருவதுதான் நம் தமிழர் கட்டமைப்பு. சிறு வயதில் துறவறம் என்பதெல்லாம், ஆரியர்களின் கட்டுக் கதைகள்.
Tags: சிவவாக்கியம்
No Comments