சிவவாக்கியம் பாடல் 49 – தூமை, தூமை

சிவவாக்கியம் பாடல் 49 – தூமை, தூமை

49. தூமை, தூமை, என்றுலே , துவண்டலையும், ஏழைகாள்?
தூமையான பெண் இருக்க, தூமை போனதெவ்விடம்.
ஆமை போல , முழுகி வந்து, அனேக வேதம், ஓதுறீர்.
தூமையும், திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே?

ஆமை போல முழுகி வந்து , அனேக வேதம், ஓதுரீர் என்ற வரிகளில், அவர் வரலாறு சொல்கிறார். தன்வந்திரி, பரசுராமன் போன்றவர்கள் ஆமை போல கடலில் மூழ்கி, பாலைவனங்களில் , இருந்து வந்து, நம் வளமான பகுதியை, பிடிப்பதற்காக, உடுப்பி வழியாக வந்து, நம் கர்நாடக மலைகளில் இருந்த கர்நாடக தமிழர்களையும், ஆந்திரத் தமிழர்களையும், மயக்கி , தமிழர்களுக்கு எதிராக , திருப்பி அவர்களின், ஆட்சி அதிகாரங்களை மறைமுகமாக கட்டமைத்த வரலாறைத்தான் ஒரே வரியில் ஆமை போல முழகி வந்து அனேக வேதம் ஓதுரீர். என கூறுகிறார். அன்றைய நாட்களில் ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பது அவர்களைக் குறித்துத்தான். அவர்கள் வேதங்கள் எனும் பெயரில், எதையோ, அருவருப்பான கதைகளை கூறி, பெரிய மனிதர்களை பெண்களை வைத்து , மயக்கி, அவர்களை அதில் சக்தி இருப்பதாக அப்பாவி மக்களை , ஏமாற்றி நம்ப வைத்து, கல்லா கட்டிக் கொண்டிருப்பதைத்தான் , ஏமாற வேண்டாம் என்கிறார். தூமை, தூமை என்று, அலையும் ஏழைகளே, பூசை செய்தால், தீட்டு போய் விடும் என்கிறீர்களே, தூமையான பெண் இருக்கும் போது தீட்டு எங்கே போனது, நீயே தூமையால், விளைந்தவன் தானே என்கிறார். அந்த நேரங்களில் தூய்மையாக இருக்க வேண்டும் நம்மை கட்டமைத்த , சித்தர்களின் தூய்மை என்ற சொல், வடக்கில் குளிர்ச்சியான பகுதியிலிருந்து வந்தவர்களின் வாயில் சரியாக வராமல், தூய்மை என்பதற்கு பதிலாக தூமை என்று தீட்டு என மாற்றி நம்மை ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள். ஆண்கள், பெண்கள் இரு பாலருக்கும் உடல் கொடுக்கும் பெண்ணை நம் முன்னோர்கள் தெய்வங்களாக கொண்டாடினார்கள். சக்திகளாக வழிபட்டார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *