சிவவாக்கியம் பாடல் 48 – தரையினிற் கிடந்த

சிவவாக்கியம் பாடல் 48 – தரையினிற் கிடந்த

48. தரையினிற் கிடந்த போது, அன்று தூமை என்கிறீர்.
துறையறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்,
பறை அறைந்து, நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்,
முறையில்லாத ஈசரோடு பொருந்துமாறு எங்கனே?

ஈசானி மூலை என்றால் வடகிழக்கு மூலையைத்தான் குறிப்பிடுவார்கள். வடகிழக்கு மூலையில் அப்படி என்ன மகத்துவம்.?
magnetic north வடகிழக்கு மூலையில்தான் இருக்கிறது. True north என்பது வடக்கு . நம் சித்தர்களுக்கு காந்தம் கட்டுப் படுத்தும் ஆற்றல் தெரிந்திருக்கிறது. வடக்கு திசையில் தான் , அண்ட வெடிப்பின் மையத்தை நோக்கி நாம் ஈர்க்கப் படுகிறோம். ஈர்த்தல் நடக்க ஆரம்பிக்கும் பொழுதுதான் , இந்த பூமியில் உயிர்கள் உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. ஆகவே அதை நாம் ஈசனாக வழிபடுகிறோம். ஆனால் இந்த உடல் வடிவெடுக்க மூல காரணங்களில் ஒன்றான, கருமுட்டை உருவாவதையும், அது நிலாவின் சுற்றான 28 நாட்கள் கழிந்து , கரு முட்டை வெளியேறும் நாட்களை, தீட்டு என்றும், தூமை என்றும், அந்த கருமுட்டையில், விதை தரித்து, கருதரித்து நம் அழகான , உடலாக மாறி வெளி வந்தாலும், தீட்டு என கூறி , தீட்டு கழிக்கிறேன் என்று வியாபாரம் பார்க்கும், முறையிலாத ஈசரோடு , பொருந்தி மற்ற காரியங்கள் ஆற்றுவது எப்படி.? என கேட்கிறார். அவாகளையும் ஈசர் என அழைக்கக் காரணம், அவர்களும் அறியாமல், இயற்கை புரியாமல், அல்லுறுகிறார்கள். ஆனால் இயற்கை புரிந்தால், ஈசராகி விடுவார்கள் என்பதால் தான் அப்படி அழைக்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *