சிவவாக்கியம் பாடல் 46 – சாதி ஆவது ஏதடா?

சிவவாக்கியம் பாடல் 46 – சாதி ஆவது ஏதடா?

46. சாதி ஆவது ஏதடா? சலம் திரண்ட நீரெலாம்,
பூதவாசல் ஒன்றலோ? பூதம் ஐந்தும் ஒன்றலோ?
காதில் வாளி, காரை , கம்பி, பாடகம், பொன், ஒன்றலோ?
சாதி பேதம் ஓதுகின்ற, தன்மை என்ன தன்மையே!.

பூத வாசல் ஒன்றலோ ? , பூதம் ஐந்தும் ஒன்றலோ? என்றால் புரிந்து கொள்ள வேண்டும். பெருவெடியில், அதாவது சத்தம் , அதில் இருந்து தோன்றுவது தான் வெளி, காலம் மற்ற பூதங்களான , காற்றும் வெடியின் Pressure -ஆல் தோன்றுவது தான். காற்று வேகமாக பரவுவதால் வெப்பம் தோன்றும். ஆக வெப்பம் என்றால் அங்கே வெளி, காற்று, வெப்பம் மூன்றும் இருக்கும். அடுத்த பூதம் நீர் . அதில் காற்று தான் குளிர்ச்சி ஆகி , நீர் ஆக மாறுகிறது. ஆகவே நீர் என்பது மற்ற மூன்று பூதங்களும் சேர்ந்தது தான். நான்கு பூதங்களும் சேர்ந்தால் தான் நிலம் உருவாகும். அப்படிப் பார்த்தால் மூலம் வெடிப்பு என்கிற நாதம் தான். ஆக வாசலும் ஒன்று , பூதங்களும் வெவ்வேறாக தெரிந்தாலும், அனைத்தும் வந்த மூலம் ஒன்றுதான். அதனால் தான் இறைவனை நாதன் என்கிறோம்.
அப்படி ஆண், பெண் உடல்கள் உருவாவது, நீர் திரண்டு , உருண்டு தான் . இதில் சாதி எங்கிருந்து வந்தது. நம் தமிழ் சமூகத்தில் , குடிகளும், குலங்களும் தான் இருந்தது. குடி என்றால் அவர்கள் குடி இருக்கும் இடத்தைப் பொருத்து அமையும். மலைகளில், தரையில், ஆற்றோரம் என குடி இருக்கும் இடத்தைப் பொருத்து குடி பட்டமும். செய்யும் வேலையைப் பொருத்து குலப் பட்டங்களும்., இருக்கும். வேலையும் அவரவர்கள் தேர்ந்தெடுப்பது தான். குடிகளுக்குள்ளும், குலங்களுக்குள்ளும் எந்த ஏற்ற தாழ்வுகளும் கிடையாது. ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் உடுப்பி வழியாக உள் நுழைந்து , ஆட்சியாளர்களை அந்தப்புரங்களின் வழியாக கைப்பற்றி, சாதிகளை உருவாக்குகிறார்கள். அதை எதிர்த்து தான் அன்றே போர் கொடி உயர்த்துகிறார். வாளி, தண்டை, பொன், கம்பி, என அனைத்தும், ஒன்றுதான் என்கிறார். அதுவே ஒன்றாக இருக்கும் பொழுது, இந்த சாதி என மனிதர்களைப் பிரிக்கும் தன்மை என்ன தன்மையோ? என புழங்குகிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *