45. சித்தம் அற்று, சிந்தை அற்று, சீவன் அற்று நின்றிடம்.
சக்தி அற்று , சம்பு அற்று, சாதி பேதமற்று நல்.
முக்தி அற்று, மூலம் அற்று மூலமந்திரங்களும்,
வித்தை, வித்தை, ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே!.
சித்தம் அற்று என்றால், சித்தம் என்றால் என்ன? இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சித்தம் என்றால் நம் உடல் உள் உறுப்புகளின் இயக்கம், நம் கட்டுப்பாட்டில் இல்லை. அதைப்பற்றிய அறிவு, இந்த பேரண்டத்தின் இயக்கங்களின் அறிவும் சித்தம் தான். இப்படி இறைவனால் நமக்கு மறைக்கப்பட்டு இயங்கும் இயக்கங்களின் அறிவு தான் சித்தம். அந்த மறைக்கப் பட்ட அறிவு தெளிந்து, புரிந்து கொண்டால் அதைத் தான் சித்தம் தெளிந்தவர்கள் என சொல்வார்கள். ஆனால் நம் கட்டுப்பாட்டில் புறத்தில் செய்யும் வேலைகளுக்கு, வேண்டிய அறிவு, புத்தி எனப் படும். அது சிந்தை என்வும் படும். இப்படி சித்தம் அற்று, சிந்தை அற்று, உடல் இயங்கத் தேவையான சீவனும் அற்று, எந்த இடத்தில் நின்றுள்ளது எதுவோ அது. அதே போல் சக்தி அற்று, அதாவது உடல் வளர்வதற்கு தேவையான சக்தி தேவையில்லாமல் அற்று, உடல் விளைவு இல்லாமல், இருக்கின்ற அது சாதி பேத மற்ற நல்லது. அது எது? பெண்களின் உடலில் கரு முட்டையாக உருவாகி, இன்னும் உயிர் பற்றாமல் இருப்பதைத்தான் அப்படி கூறுகிறார். அதற்கு முக்தி தேவையில்லாமல், மூலமும், மூல மந்திரங்களின் தேவையற்றும் இருக்கிறது. ஏழாம் சக்கரமான பேரண்டம் என்கிற வித்தை, நம் சிற்றம்பலத்தில் வித்தை உருவாக்கி அதைக் கொண்டு, ஆணின். விறைப் பையில் ஈன்ற வித்தில் விளைந்தது தான் சிவாயம் என்னும் சிவம் , என்று கூறுகிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments