சிவவாக்கியம் பாடல் 43 – அம்பலத்தை அம்பு

சிவவாக்கியம் பாடல் 43 – அம்பலத்தை அம்பு

43. அம்பலத்தை அம்பு கொண்டு, அசங்கென்றால், அசங்குமோ?
கம்பமற்ற பாற்கடல், கலங்கென்றால் , கலங்குமோ?
இன்பமற்ற யோகியை இருளும், வந்து அனுகுமோ?
செம்பொன், அம்பலத்துள்ளே , தெளிந்ததே சிவாயமே !.

அம்பலம் மற்றும் செம்பொன் அம்பலம் இரண்டிற்கும் என்ன வேறுபாடு. அம்பலம் என்றால் பேரம்பலம் , அதாவது இந்த பரந்த அண்ட வெளி.
சிற்றம்பலம் என்றால் நம் தலைக்குள் இருக்கும் வெளி. அந்த சிற்றம்பலத்தைத்தான் இங்கே செம்பொன் அம்பலம் என்கிறார். இந்த பேரம்பலத்தை சிறு அம்பு கொண்டு அசைத்து விட முடியாது. ஏனென்றால் அம்பு குத்தி நின்றால் தானே , அதை வைத்து அசைக்க முடியும், பேரம்பலத்தில் குத்தி நிற்க இடமில்லை என்பதை சொல்கிறார். பாற்கடல் என்றால் milky Way வைத்தான் குறிப்பிடுகிறார். அதில் கம்பம் இல்லை என்றும், அந்த கம்பம் இருந்தால் தான் அதைத் தயிர் கடைவது மாதிரி கடைய முடியும் என்கிறார். இதைப் போலத்தான், இன்பம் எனறு எதையும் அனுபவிக்காமல் இருக்கும் உண்மையான, யோகிகளை துன்பம் எப்பொழுதும் அனுகாது என்கிறார். ஓம் நமசிவாய எனும் மந்திரத்தில், ஓம் என்பது மூலாதாரத்துக்கும். நமசிவாய என்பது நம் உடல் அமைப்பின் அறிவியலின் , சுருக்கமான எழுத்துக்கள். அதில் ய என்பது வெளியை குறித்து தலைப்பகுதியை குறிப்பது. அதில் ம் என்ற எழுத்து மௌன எழத்தாக , ய வில் அடக்கம். அதாவது. சிவாயம் என்பதைத்தான் சிவாய என ம் சொல்லாமலே அதில் அடக்கம். அதாவது வெளியில் ம் என்ற நாதம் அடங்கி இருக்கும். அதைத்தான் இங்கு செம்பொன் அம்பலத்தில் தெளிந்ததே சிவாயம் என்கிறார். இப்படி பிரபஞ்சத்தின் அறிவும், உடலின் அறிவும் தெரிந்தவர்கள் தான் யோகிகள் என்கிறார். அவர்களைத் துன்பம் வந்து அனுகாது என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *