42. பிறப்பதற்கு முன்னெலாய், இருக்குமாறு தெங்கனே?
பிறந்து மண், இறந்து போய், இருக்குமாறு தெங்கனே?
குறித்து நீர சொல்லாவிடில், குறிப்பு இல்லாத மாந்தரே?
அறுப்பனே செவி இரண்டும் ஐந்து எழுத்து வாளினால்.
நாம் பிறப்பதற்கு முன் எங்கே இருந்தோம். இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து, இறந்த பின் எங்கே இருக்கிறோம்? இதைப் பற்றி உங்களிடம் குறிப்பு இருக்கிறதா? என வேதம் ஓதுபவர்களையும், ஆன்மீகம் , என மக்களை ஏமாற்றுபவர்களையும் பார்த்து கேள்விகள் எழுப்புகிறார். இவர் கேள்விகள் மட்டும் எழுப்புவதில்லை, பின் வரும் பாடல்களில் பதில்களையும், கொடுக்கிறார். அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லா விடில், காதுகளை, ஐந்து எழுத்து மந்திரத்தால், அறுத்துவிடுவேன் என்கிறார். ஏனென்றால், செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பதால் தான்.
Tags: சிவவாக்கியம்
No Comments