41. ஓதுகின்ற வேதம் எச்சில், உள்ள மந்திரங்கள் எச்சில்,
போதகங்கள் ஆன எச்சில், பூதலங்கள் ஏழும் எச்சில்,
மாதிருந்த விந்து எச்சில், மதியும் எச்சில், ஒளியும் எச்சில்.
ஏதில் எச்சில் இல்லதில்லை,, இல்லை, இல்லை இல்லையே!
ஓதுகின்ற வேதம் எச்சில், உள்ள மந்திரங்கள் , அனைத்தும் எச்சில் தான் என்கிறார், அதே போல், நாம் அடுத்தவர்களுக்கு போதிக்கும் , கருத்துக்கள் அனைத்தும் எச்சில், நம் உடலில் உள்ள ஏழ சக்கரங்களும் எச்சில், நம் தேகம் உருவாக காரணமான, கருமுட்டையும், விந்துவும் எச்சில் தான் என்கிறார். நிலாவும் சூரியன் கதிரைத்தான் பிரதிபலிக்கின்றது. அதுவும் எச்சில் தான், ஒளியும் எச்சில் தான், எல்லாமே எச்சில் தான், எதில் எச்சில் இல்லை என கேட்டு விட்டு, எச்சில் இல்லாதது எதுவுமே இல்லை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments