40. வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்லுகிறீர்.
வாயிலே குதப்பு வேதம், என படக் கடவதோ?
வாயில் எச்சில் போக வென்று, நீர் தனைக் குடிப்பீர்காள்?
வாயில் எச்சில் போன வன்னம், வந்திருந்து சொல்லுமே!.
அவர்கள் வேதம், என்று ஓதுவது பொய்களாக இருப்பதை அறிந்து, அதை எள்ளிநகையாடுகிறார். அதற்காகத் தான், வாயில் குடித்த நீரை வெளியே துப்பினால், எச்சில் என்று சொல்கிறீர்களே, வேதம், ஓதுகிறோம் என்று வாயில் குதப்பி சொல்வதை என்ன வென்று சொல்வீர்கள், வாயில் உள்ள எச்சில் போக வென்று, தண்ணீர் குடிக்கிறீர்களே? வாயிலே எப்படி எச்சில் போனது என்று வந்து சொல்ல முடியுமா? இன்று வரை அவர்கள் வேதம் எனும் பொய் தொடர்ந்து கொண்டுதான், இருக்கிறதோ?
Tags: சிவவாக்கியம்
No Comments