சிவவாக்கியம் பாடல் 39 – பறைச்சி ஆவது ஏதடா?

சிவவாக்கியம் பாடல் 39 – பறைச்சி ஆவது ஏதடா?

39. பறைச்சி ஆவது ஏதடா? பணத்தி ஆவது ஏதடா?
இறைச்சிதோறும், எலும்பினோடும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சி போகம், வேறெதோ? பணத்தி போகம் வேறெதோ?
பறைச்சியும், பணத்தியும் , பகுத்துப் பாரும் உம்முள்ளே !.

நம் தமிழ் குடிகளிலும், குலங்களிலும், என்றுமே ஏற்ற தாழ்வுகள் இருந்ததில்லை. இந்த 1500 வருடங்களாக பிராமணர்களால், உருவாக்கப்பட்ட ஏற்ற தாழ்வுகள் அவர் காலத்திலும் இருந்திருக்கிறது. அதைத்தான் அவர் , மனிதர்களின் சதைகளிலும், எலும்புகளிலும், ஏறற தாழ்வுகளைக் குறிக்க எண்கள் போட்டிருக்கின்றதா என்ன? என பிராமணர்களைத்தான் கேட்கிறார். அதைத் தான் பெண்களை வைத்து பாட்டை , வடித்துள்ளார். பணத்தி என்றால் அந்த காலத்தில் பிராமணப் பெண்களைத்தான் அப்படி குறிப்பிடுவார்கள்.
ஏற்ற தாழ்வுகள் கிடையாது, அதை பகுத்துப் பாரும் உம் உள்ளே! என்று அவர்களைத்தான் சாடுகிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *