சிவவாக்கியம் பாடல் 38 – இருக்க நாலு

சிவவாக்கியம் பாடல் 38 – இருக்க நாலு

38. இருக்க நாலு வேதமும், எழுத்தை அற ஓதினும்!
பெருக்க நீறு பூசினும், பிதற்றினும், பிரான் இரான்,
உருக்கி நெஞ்சை, உட்கலந்து, உண்மை கூற வல்லீரேல்?
சுருக்கமற்ற சோதியை, தொடர்ந்து கூடலாகுமே.

இருக்க என்றால் , வாழ்வியல் எப்படி இருக்க வேண்டும் , என்பதற்கு நான்கு வேதங்களை பொய்யாக உருவாக்கியும், எழுத்துக்களால் பொய்யாக அதை உருவாக்கி , ஓதினாலும், வெருக் வெருக் என்று திருநீறை நெற்றியில் பூசிக் கொண்டாலும், அதை மந்திரங்கள் என்று பிதற்றிக் கொண்டு இருந்தாலும் , அங்கே , அந்தத் தலைவனாகிய பிரான் இருக்க மாட்டான். ஆனால் நெஞ்சு உருக , அந்தத் தலைவனாகிய, பிரான் பற்றிய உண்மைகளை உலகுக்கு எடுத்துச் சொல்பவர்கள் , அந்த சுருக்கங்கள் இல்லாத , தலைவனாகிய சோதியுடன், தொடர்ந்து, கூடி உலகுக்கு நன்மையாக இருப்பார்கள் என கூறுகிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *