37. பூசை பூசை என்று நீர், பூசை செய்யும் பேதைகாள்,
பூசை உள்ள. தன்னிலே, பூசை கொண்டது எவ்விடம்?
ஆதி பூசை கொண்டதோ? அனாதி பூசை கொண்டதோ?
ஏது பூசை கொண்டதோ? , இன்னதென்று இயம்புமே?
நம்முடைய சித்தர் பாட்டுக்கள் , அனைத்துமே , பேச்சு வழக்கில், உள்ள சொற்களை வைத்துத் தான் பாடி இருப்பார்கள். தமிழக்கு மட்டும்தான், பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என இரு வகையான நடைமுறை உள்ளது. அப்படி பேச்சு வழக்குகளில் உள்ள சொற்கள், தமிழர்களுக்கு மட்டுமே புரியும். அதாவது வட்டார மொழி. இப்படி எளிமையாக புரிய கூடியதுதான், சித்தர் பாடல்கள். திருக்குறளும் அப்படித்தான். திரும்பத் திரும்ப இரண்டு மூன்று முறை படித்தால் அனைவருக்கும், புரியும்.
கொண்டது என்றால் அதை ஏற்றுக் கொள்வது என்று பொருள். பூசை பூசை என பல்வேறு பூசைகளை செய்கிறீர்களே பேதைகளே, என்கிறார். அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை, ஆனால் எது சரி என்று தெரியாமல் செய்வதைத்தான் பேதைகாள் என்று சொல்கிறார். நீங்கள் பூசை செய்தால் அந்த பூசையை ஏற்றுக் கொள்வது எது, அது எந்த இடத்தில் உள்ளது? என கேட்கிறார். ஆதி பூசை கொண்டதோ? என்றால் அந்த ஆதியான, வெளி, காற்று, வெப்பம் , இம் மூன்றும் அதை ஏற்றுக் கொண்டதா.? நீங்கள் பூசைக்கு எடுக்கும் பொருட்களே அதுதானே? என்கிறார். அதே போல் அனாதி பூசை கொண்டதோ? என்றால் , அனாதி என்றால் உள்ளம். பூசை செய்வதும் உங்கள் உள்ளம்தான், அதை ஏற்றுக் கொள்வதும் உங்கள் உள்ளம் தான் என்கிறார். இதை என்ன வென்று சொல்வது?. இதை யார் சொல்வது ? என வியப்பு கொள்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments