35. மாறுபட்டு மணி துலக்கி, வண்டின் எச்சில் கொண்டு போய்,
ஊறுபட்ட கல்லின் மீதே, ஊற்றுகின்ற , மூடரே,
மாறுபட்ட தேவரும், அறிந்து நோக்கும் என்னையும்,
கூறுபட்டு, தீர்க்கவோ, குருக்கள் பாதம் வைத்ததே!.
இறைவன் , நம் உள்ளத்தில் தான் உள்ளார், என்ற உண்மை அறியாமல், என்னோடு மாறுபட்டு நிற்கும் மனிதர்கள், பூசை செய்ய அடிக்கும், மணியை தினமும், துடைத்து, துலக்கியும், வண்டு- பூக்களின் தேன் குடிக்க , வந்து அமர்ந்து, அதன் எச்சில் பட்ட, பூக்களையும், தேனையும் , அடிவாங்கி, செதுக்கப்பட்ட, ஊறுபட்ட கல்லின் மேல் ஊற்றி பூசை செய்யும் மூடரே. என்கிறார். ஏனென்றால், குழந்தைகளுக்கு புரிய வைக்க, செய்த சில செயல்கள். அதை பெரியவர்களும் , அப்படியே செய்து கொண்டு, மூடத்தனமாக இருக்கிறார்கள் என ஆதங்கப்படுகிறார். இது புரியாமல், அவரோடு மாறுபட்டு நிற்கும் அவர்களையும் தேவர்கள் என்று அழைக்கிறார். ஏனென்றால் அவர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறான், என்பதால் தான். அவருக்கும், அவரோடு மாறுபட்டு நிற்கும், அவர்களுக்கும், இடையே பிரிவினையை உண்டாக்கி விட்டாரே இந்த இறைவன் என , ஆச்சரியத்துடன் , வினவுகிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments