33. வாட்டில்லாத பரமனை , பரம லோக நாதனை!
நாட்டிலாத நாதனை, நாரி பங்கர் பாகனை!
கூட்டி மெல்ல வாய்புதைத்து, குனு குனுத்த மந்திரம்!
வேட்டக்கார குசுகுசுப்பை கூப்பிடாமு நின்றதே!.
இதுதான் வடிவம் என்று இல்லாமல், எங்கும் பரந்து இருக்கும், பரமனை, எல்லை இல்லாமல் விரிந்து நிற்கும் அந்த பரந்த லோக நாதனை (தலைவனை) , எங்கயாவது , நின்று, எதிலாவது நாட்டத்துடன் , விருப்பு வெறுப்பு இல்லாத, நாட்டிலாத நாதனை, மதயானை வெறி கொண்ட ஐம்புலன்களை, சாதரணமாக கையாளும் பாகனாக.உள்ள தலைவனை, கூப்பிட்டு மெல்ல வாய் மேல் கை வைத்து , உன்னை அறிவது எப்படி என , மனதால் நினைத்து, உருகி நின்றபோது! அவன் எனக்குள் குனு குனுத்த மந்திரம் எது என்றால்? வேட்டை ஆட செல்லும் பொழுது, திடீர் நிகழ்வுகளில், நமக்குள்ளே , இதை செய். அதை செய் என குசு குசுப்பாக ஒரு குரல் , ஒழிக்கும். அந்த குசு குசுப்பான குரலில் நான்தான் என , கூப்பிடாமல் என்னுள் நின்றதே.
Tags: சிவவாக்கியம்
No Comments